H Vinoth Next Movie Hero After Vijay Jana Nayagan : பிரபல தமிழ் பட இயக்குநர் ஹெச்.வினோத் தற்போது விஜய்யை வைத்து ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இவரது அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?
H Vinoth Next Movie Hero After Vijay Jana Nayagan : கோலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படமாக இருக்கிறது, ஜன நாயகன். இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகளில், அதன் இயக்குநர் ஹெச்.வினோத் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த படத்திற்கான ஹீரோ யார் என்பதையும் அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த ஹீரோ யார் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
விஜய், கடைசியாக நடித்து வரும் படம் ஜன நாயகன். இந்த படம், அவருக்கு 69வது படமாகும். முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க இருக்கும் முன்பு ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் விஜய், இதிலும் கண்டிப்பாக அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.
ஹெச்.வினோத், இதுவரை அஜித்துடன் கைக்கோர்த்து வெற்றிப்படங்களை தேடிக்கொடுத்த இயக்குநர்களுள் ஒருவர். இவர் விஜய்யுடன் கூட்டணி அமைத்திருப்பது இதுவே முதன்முறை. இந்த கூட்டணி எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அவருக்கு வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது.
ஜன நாயகன் படத்தை அடுத்து, ஹெச்.வினோத் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹீரோ யார் தெரியுமா?
அந்த ஹீரோ வேறு யாருமில்லை, தனுஷ்தான். இவர் ஏற்கனவே இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கும் நிலையில், பிரேக் எடுக்காமல் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார்.
41 வயதாகும் தனுஷ் அம்பிகாபதி மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்த தனுஷ் தொடர்ந்து ஷமிதாப், அட்ராங்கி ரே உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து தற்போது தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் ஹெச்.வினோத்துடனும் கைக்கோர்க்க இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
2 ஆண்டுகளுக்கு பிசியாக கமிட்மெண்டில் இருக்கும் இவர், ஹெச்.வினோத்துடன் கைக்கோர்ப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.