Vidaamuyarchi Box Office Collection Day 2 : அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம், உலகளவிலும், தமிழகத்திலும் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi Box Office Collection Day 2 : அஜித் நடிப்பில், 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு தியேட்டரில் வெளியாகியிருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். இரண்டாம் நாளில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்ட படம் விடாமுயற்சி. பணிகள் தாமதமானதன் காரணமாக, இந்த படத்தின் வேலைகள் 2 ஆண்டுகள் தாமதமானது.
விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இது, இவர்கள் இணைந்து நடிக்கும் 5வது படமாகும். இவர்கள் ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இதில் வில்லன்களாக அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், கணவன் தனது காணாமல் போன மனைவியை தேடி போவது போலவும், அதிலிருந்து பல பிரச்சனைகள் ஆரம்பிப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள், இந்த படத்தை கொஞ்சம் மெதுவாக இருக்கிறது என விமர்சித்தாலும், காட்சியமைப்புகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் நன்றாக இருப்பதால் இதற்கு பாஸ் மார்க் கொடுத்துள்ளனர்.
விடாமுயற்சி படம், முதல் நாளில் உலகளவில் 60.32 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் நாளில், இப்படம் சுமார் 8.75 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், மொத்தத்தில் தமிழகத்தில் மட்டும் 34.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, அஜித்தின் பிற படங்கள் மற்றும் சமீபத்திய பெரிய ஹீரோக்களின் படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் மோசமானது என திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.