Raja Yoga Occurs 5 Zodiac Signs: கேது ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் கூடுதலான நன்மைகள் அடைய போகின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் பெறுவார்கள் மற்றும் நிதி பிரச்சனை தீரும். நிதி வருவாய் அதிகரிக்கும் மேலும் பல நன்மைகள் நடக்கும் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
கேது பெயர்ச்சி 2025(ketu transit 2025): வருகின்ற மே மாதத்தில் கேது ராசி மாற்றம் செய்கிறார். கேது சிம்ம ராசிக்குப் பிரவேசிக்கவுள்ளார். கேது என்பது ஒரு நபரின் அதிர்ஷ்டத்தை மாற்றும் சக்திவாய்ந்த திறன் கொண்ட ஒரு பிரகாசமான கிரகம் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட 5 ராசிகள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நீங்களும் இந்த ராசியில் ஒருவரா?
2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் கேது சிம்ம ராசியில் பிரவேசிக்கவுள்ளது. வேத ஜோதிடத்தின் படி, கேது என்பது நபரின் அதிர்ஷ்டத்தை மாற்றி அமைக்கும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறது. இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும், ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளை அனுபவிக்கப்போகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும்.
கேது ராசி(Ketu zodiac sign) மாற்றத்தின் மூலம், குறிப்பிட்ட 5 ராசிகள் நிதி சிக்கல்கள் தீர்ந்து, தங்கள் வருவாயை அதிகரிக்க முடியும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மேலும் பல நன்மைகளை அடைவார்கள். இந்த சந்தர்ப்பங்களில், நிதி நிலை முன்னேறி, சமூகமாகவும், தொழில்முனைவோராகவும் முன்னேற்றம் காண்பார்கள். வேத ஜோதிடத்தில் இந்த ராசி மாற்றம் அவர்களுக்குச் சிறந்த காலத்தைத் தரும் எனக் கூறப்படுகிறது.
மேஷம்(Aries) : ராசிக்காரர்கள் வியாபாரம், தொழில் மற்றும் வேலை உள்ளிட்ட அனைத்திலும் அதிக இலாபம் ஈட்டுவார்கள். உங்கள் வாழ்க்கையில் ஒளிவட்டமான மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.
மிதுன ராசி(Gemini): இவர்களுக்குச் சாதனைகள் புரியும் காலமாக அமைகிறது. எதிரிகளை வெல்ல உதுவே உகந்த நேரம். வாழ்க்கையில் தீர்க்க முடியாதப் பிரச்சனைகள் பலவற்றை இனி சுலபமாக முடியும். உடல் நலத்தில் ஆரோக்கியம் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவீர்கள்.
கடகம்(Cancer): கேதுவின் இடப்பெயர்ச்சியால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் தேடிவரும். உழைப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் அதற்கான ஊதியம் ஈட்டுவீர்கள். நிதி நிலைமையில் மேம்படுவீர்கள். வேலையில் மதிப்பு அதிகரிக்கும் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல இலாபம் காண்பீர்கள்.
கன்னி(Virgo:): இந்த கிரகப் பெயர்ச்சியால் இவர்களுக்குக் கடன் தொல்லையில் நிவாரணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் போன்றவற்றில் நல்ல இலாபம் கிடைக்கும். நிதி பிரச்சனைகள் தீரும்.
துலாம்(Libra): இந்த கேது சஞ்சாரம் உங்களுக்குப் பக்க பலமாக்க இருக்கும். தொழில், வியாபாரம் மற்றும் வேலை போன்றவற்றில் வருமானம் அதிகரிக்கும். நிதி பிரச்சனைகள் தீரும் மற்றும் நிதி வருவாய் பெறுவீர்கள். தொழில் மற்றும் வேலையில் மதிப்பு அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.