நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த வருடம் டிசம்பரில் கோவாவில் திருமணம் நடந்துமுடிந்தது. திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழுத்தில் புதுத்தாளியுடன் சிவப்பு நிற உடையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கீர்த்தி சுரேஷ் திருமணமாவதற்கு முன்பாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தனது வருங்கால கணவர் குறித்துப் பேசியதில்லை. அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் தன் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. கீர்த்தி சுரேஷ் தற்போது கிளேமர் நடிகையாக வளம் வருகிறார். இவர் தன் சொந்த ஊரில் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு ரசிகர்களின் கண்களைக் கொள்ளையடித்துவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் தன் சொந்த ஊர் கேரளாவில் பாரம்பரிய முறையில் அதாவது கேரளாவின் பாரம்பரிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் உடையை அணிந்து ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் திருமணம் ஆன பின்னரும் எந்த நிகழ்ச்சியிலும் கணவரை அழைத்துச் செல்லவில்லை. ஆனால் தன்னுடைய தல பொங்கலைத் திரைப்பட தயாரிப்பாளர் தொகுத்து வழங்கிய பொங்கல் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் தன் கணவர் ஆண்டனி தட்டிலுடன் கலந்துகொண்டார்.
கீர்த்தி சுரேஷ் பல தமிழ்ப் படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார். இந்தவகையில் இவர் ஹிந்தி திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினார். இதில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடை அணிந்து நடனமாடியுள்ளார். இந்த பாடல் பல மில்லயன் பார்வையாளர்களைக் கடந்ததும் குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்து தன் சொந்த ஊரான கேரளாவில் கணவருடன் இணைந்து திருமண வரவேற்பில் பங்கேற்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய செல்ல பிராணியுடன் கீர்த்தி சுரேஷ் திருமண வரவேற்பில் மாசான எண்டிரி கொடுத்தார்.
கீர்த்தி சுரேஷ் தன் செல்ல பிராணிக்கும் வெள்ளை உடை அணிந்து வேட்டி சட்டை போட்டு மூவரும் இணைந்து எடுத்த புகைப்படம்.
பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆண்டனி தட்டில் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு ரோஜாக் கொடுத்து காதலைச் சொல்லும் புகைப்படம்.
ஜாலியாக ஆண்டனி தட்டிலுடன் கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடிய புகைப்படம் இணையத்தில் வைரல்.