Vitamin E: அழகை பேரழகாக்கும் மந்திரம்! இது வைட்டமின் ஈ சொல்லும் அழகு தந்திரம்!

Importance Of Vitamin E: சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் வைட்டமின் ஈ, தோற்றப்பொலிவுக்கு காரணமான ஊட்டச்சத்து ஆகும். உடலில் விட்டமின் குறைபாடு இருந்தால் சருமம் பொலிவிழந்து காணப்படும்...

தினமும் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் சி, உட்கொண்டால் சருமம் பளபளப்பாகவும் அழகாகாவும் மாறும்  

1 /9

உணவே ஆரோக்கியம் என்பதும், அதுவே அழகுக்கு அடிப்படை என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரோக்கியத்தைத் தரும் உணவுப் பொருட்களே அழகையும் தருமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது

2 /9

வயதாகும்போது அறிவு முதிர்ச்சி மட்டுமல்ல, தோற்றத்திலும் முதிர்வுத்தன்மை தெரியும். அறிவு முதிர்ச்சியால் சந்தோஷப்பட்டாலும், தோற்றம் முதுமையானால் அது யாருக்கும் பிடிப்பதில்லை

3 /9

என்றும் 16 வயதாக இருக்க வேண்டும் என்பது வேண்டுமானால் பேராசையாக இருக்கலாம். ஆனால், இளமையாக இருக்க ஆசைப்படுவது, பார்க்க பளிச் என தோற்றமளிக்க விரும்புவதும் இயல்பான ஆசை தான்.  இதற்கு உதவும் விட்டமின் ஈ நிறைந்த உணவுப்பொருட்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், என்றென்றும் அழகு உங்கள் வசம் தான்... 

4 /9

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை, நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வேர்க்கடலையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், நமது உடலில் நல்ல கொழுப்பின் அளவும் அதிகரிப்பதுடன், சருமம் வறண்டு போகாமல் நீர்ச்சத்துடன் காணப்படும். தினமும் வேர்க்கடலை உட்கொள்வது தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

5 /9

ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக கருதப்படும் பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது, இது நமது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். என்பதுடன், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நல்ல அளவில் காணப்படுகின்றன.தினமும் 5-7 பாதாம் பருப்புகளை உண்பது ஆரோக்கியமானது

6 /9

வைட்டமின்-ஈ நிறைந்த அவகேடோ சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள் நம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அவகேடா பழத்தை தினமும் உட்கொள்ளலாம்.

7 /9

வைட்டமின் ஈ நிறைந்த ப்ரக்கோலி, நமது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து போன்ற தனிமங்கள் குடல் ஆரோக்கியத்தையும்  ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ப்ரோக்கோலியை சமைத்தோ அல்லது சாலடாகவோ உட்கொள்ளலாம்.

8 /9

இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரமான கீரைகள், நமது சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கின்றன.  கீரையில் வைட்டமின் ஈ அதிகமாகக் காணப்படுகிறது. இது நமது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கிறது. வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம்  நிறைந்த சிறந்த உணவுப் பொருள் கீரை...

9 /9

பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.