பலாப்பழம் சாப்பிட்டு சம்மரில் ஜம்முனு இருங்க... இத்தனை நல்லது இருக்குப்பா...!

Jackfruit Health Benefits: பலாப்பழம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தனமானது, விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் அதன் நன்மைகள் பலருக்கும் தெரியாது. அந்த வகையில், பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

  • Apr 15, 2024, 00:46 AM IST

பலாப்பழம் இந்த சீசனில் கடைகளிலும், பொதுவெளியிலும் அதிகம் கிடைக்கும். இதனை முழு பழமாக வாங்கி வந்து வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம்.

 

1 /7

பலாப்பழம் யாருக்குத்தான் பிடிக்காது. யாராவது பலாப்பழத்தை பிளந்து உரித்துக் கொண்டுத்தால் எத்தனை பழங்களை வேண்டுமானாலும் நாம் சாப்பிடுவோம். ஆனால், அதன் பின் உள்ள ஆரோக்கிய நன்மைகளை நாம் யோசித்திருக்கவே மாட்டோம்.  

2 /7

அந்த வகையில், பலாப்பழத்தின் முக்கிய 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.   

3 /7

பலாப்பழத்தில் Glycaemic Index என்பது குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நன்மையே பயக்கும். இது வயிறு நிரம்பியதாக உணர வைக்கும். 

4 /7

பலாப்பழத்தில் பொட்டாஸியம் மற்றும் ஃபைபர் அதிக உள்ளது. இது இதய நோய் வருவதற்கான  வாய்ப்பை குறைக்கும்.   

5 /7

பலாப்பழத்தில் குறைவான கலோரியே உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமிண் பி1, பி3, பி6 உள்ளது.   

6 /7

பலாப்பழத்தில் தாவர ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை சர்க்கரை நோய் உள்பட பல நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது.  

7 /7

வைட்டமிண் சி மற்றும் பீட்டா-கரோட்டின் ஆகியவற்றுடன் ஃபைபரும் உள்ளதால் பலாப்பழம் குடலுக்கும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாகும்.