Indra Ekadashi : புரட்டாசி மாதத் தேய்பிறை ஏகாதசியான இந்திரா ஏகாதசி செப்டம்பர் 27ம் தேதியன்று வருகிறது. புராட்டாசி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரியது என்றாலும்,பித்ருக்களுக்கான கடமைகள் செய்வதற்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானது
இந்திர ஏகாதசி பித்ருக்களின் சாபத்தை நீக்கும் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் பித்ரு சாபம் உள்ளவர்கள், இந்த விரதத்தை மேற்கொண்டு பித்ரு தோஷங்களை நீக்கலாம்...
இந்திர ஏகாதசி நாளில் விரதம் இருந்து, விஷ்ணுவை வணங்குவது வாழ்க்கையை மேம்படுத்தும். முன்னோர்களின் ஆசிகள் கிடைத்து, எதிர்கால சந்ததியினரும் வளமாய் நலமாய் வாழ்வார்கள்
இந்திர ஏகாதசி விரதம் வைப்பவர்களுக்கு, இந்திரனுக்கு கிடைத்த சுகபோகங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
2024 இந்திரா ஏகாதசி எப்போது? இந்த பித்ரு பக்ஷத்தின் ஏகாதசி தேதி வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27 மதியம் 1:20 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 28 மதியம் 2:49 மணிக்கு முடிவடையும். எனவே செப்டம்பர் 28ம் தேதி இந்திரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்திரா ஏகாதசி அன்று செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 7:42 முதல் 9:12 வரை வழிபாடு செய்ய உகந்த நேரம். மாலையில், 3:11 முதல் 4:40 மணி வரை பூஜைகள் செய்யலாம்
இந்திரா ஏகாதசி நாளில் அதிகாலையில் நீராட வேண்டும். வழக்கமான பூஜைகளை செய்யவும். தீபம் ஏற்றி, முறைப்படி நோன்பு நோற்க வேண்டும்.
ஓணம் பண்டிகை முடிந்த பிறகு வரும் ஏகாதசி என்பதால் இந்த இந்திர ஏகாதசி மிகவும் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக கேரளத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
விஷ்ணுவுக்கு லட்டு மிகவும் பிடிக்கும். இந்திரா ஏகாதசி நாளில் மஞ்சள் லட்டு நைவேத்தியம் செய்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுப்பதன் மூலம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
இந்திரா ஏகாதசி நாளில், பாயாசம் செய்து படைக்கலாம். வாழ்க்கையில் நலம் பெற பாயாசத்தை பிறருக்கு பகிர்ந்தளியுங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது