கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறதா... இதையெல்லாம் செய்யாதீர்கள்!

பலருக்கும் தற்போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

  • Apr 21, 2023, 22:28 PM IST

 

 

 

 

1 /5

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது, இன்றைய காலத்தில் பொதுவானதாகிவிட்டது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.   

2 /5

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பக்கவாதம், டைப் 2 நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மக்கள் பொதுவாக சில தவறுகளை செய்கிறார்கள். இதனால், அவர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

3 /5

ஆரோக்கியமற்ற உணவு: உங்கள் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டீர்கள் எனில், உங்கள் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கக்கூடும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு, இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவற்றை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

4 /5

உடற்பயிற்சியை தவறவிடுவது: நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அது உங்களுக்கு மேலும் சிரமத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

5 /5

புகைபிடித்தல்: புகைப்பிடித்தல் உடலில் உள்ள நல்ல கொழுப்பைக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க, புகைப்பிடிப்பதை முற்றிலுமாக கைவிடுங்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)