குறை கூறுவதை குறைத்துக்கொள்வது எப்படி? 8 ஈசியான வழிகள்!!

How To Stop Complaining In Life : நம்மில் பலர், வாழ்க்கையை பற்றி குறைக்கூறிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவே மறந்து போயிருப்போம். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

How To Stop Complaining In Life : வாழ்வில் அனைவருக்கும் அவர்கள் கேட்கும் விஷயங்கள் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலர், தனக்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் அதை எதிர்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு செல்ல எளிதில் தயாராகி விடுவர். ஆனால் ஒரு சிலரோ, தனக்கு வாழ்க்கை எவ்வளவு நல்ல விஷயங்களை கொடுத்தாலும் அது குறித்து குறை கூறிக்கொண்டே இருப்பர். நீங்களும் அது போன்ற ஒரு ஆளாக இருந்தால் தாமதிக்காமல் இப்போதே அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ 8 ஈசியான வழிகள்!

1 /8

நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்ற வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணங்கள் உங்களுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு எந்த வகையில் உதவும் என்பதையும் நீங்கள் கவனித்தால் கண்டிப்பாக குறை கூறுவதை நிறுத்துவீர்கள். 

2 /8

உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்ற விரும்பும் விஷயங்கள் மீதும், அதை எப்படி மாற்றினால் உங்கள் வாழ்க்கை முன்னேறும் என்பதையும் பார்க்க வேண்டும். பின்னர், அதை மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை மாறும். 

3 /8

தியானம் செய்வது, உங்கள் மனதையும் எண்ண ஓட்டங்களையும் தூய்மை படுத்த உதவும். எனவே தினமும் தியானம் செய்து பழகுங்கள். 

4 /8

உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அது உடற்பயிற்சி செய்வதாக இருக்கலாம், ஏதேனும் புதிதாக கற்றுக்கொள்வதாக இருக்க்லாம், ஒரு செடி வளர்ப்பதாக இருக்கலாம். எதுவாக இருப்பினும், அது உங்கள் வாழ்வில் பாசிடிவான மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். 

5 /8

உங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களிடம் மீண்டும் மீண்டும் செல்வதை தவிர்க்கவும். அடிக்கடி போன் உபயோகிப்பது உங்கள் மனதை கெடுப்பது போல தோன்றினால் அதை செய்யாமல் இருக்கவும். 

6 /8

வாழ்வில் நாம் நன்றியுடன் இருக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. அதை நினைத்து தினமும் இந்த இயற்கைக்கு நன்றி கூற வேண்டும். 

7 /8

உங்களுக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி ஓடுங்கள். அதை அடையும் வரை ஓய்வெடுக்காதீர்கள். 

8 /8

நீங்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பது போல தோன்றினால் ஒரு வாரம் குறை கூறாமல் இருந்து பாருங்கள். இது உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை பார்த்தவுடன் நீங்களே உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.