Daily Habits That Improve Love Hormones: உங்கள் பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்க, சில பழக்கங்கள் உதவும். அவை என்ன தெரியுமா?
Daily Habits That Improve Love Hormones: மனிதர்களாக பிறந்த அனைவருக்கும், தேவைப்படுபவையாக இருக்கிறது, பாலியல் உணர்ச்சிகள். ஆனால், சமீப சில ஆண்டுகளாக மாறி வரும் வாழ்க்கை பழக்கங்களினால் பலர், அந்த உணர்ச்சிகளை வராமல் அவதிப்படுகின்றனர். இதை மாற்ற, சில தினசரி பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் தெரியுமா?
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் அல்லது பிற கெமிக்கல்களை உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் D உடலுக்கு நல்லது. தினமும், காலை ஒளியில் 15-30 நிமிடம் வரை இருக்கலாம்.
அதிகளவிலான கொழுப்பு இருந்தால் அதனை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். உடலை ஆக்டிவாக வைத்துக்கொண்டு, பாலன்ஸ் ஆன டயட்டை பராமறிக்க வேண்டும். மனதையும் உடலையும் திடமாக வைத்துக்கொண்டா, மன அழுத்தத்தை சமாளிக்கலாம். இதனால் படுக்கையறை சுகமும் அதிகரிக்கும்.
தினமும் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யலாம். இதனால், நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் உணர்வை தக்க வைப்பதோடு உடலில் இருக்கும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகரித்து, மன அமைதியை ஏற்படுத்தும். இதனால் இல்லற சுகமும் அதிகரிக்கும்.
ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் செய்தும், HIIT வர்க்-அவுட் செய்து உங்கள் ஹார்மோன்களை அதிகரிக்கும். முடிந்த வரை யோகா, கார்டியோ ஆகிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.
தினமும் 7-9 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது, Testosterone ஹார்மோன்களை அதிகரிக்கும். நல்ல உறக்கம், உங்கள் உடலில் சரியான பாலியல் ஹார்மோன்கள் அதிகரிக்க செய்யும்.
Testosterone என்ற ஹார்மோன்களை அதிகரிக்க முட்டை, நட்ஸ், கீரை மற்றும் வாழைப்பழம் ஆகிய உணவுகளை சாப்பிடலா. Estrogen எனும் ஹார்மோனை அதிகரிக்க ஃப்லேக்ஸ் சீட்ஸ், சோயா, பெர்ரி பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்