ரேஷன் கார்டு 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி? முக்கிய டிப்ஸ்

Ration Card Download News : உங்களின் ஸ்மார்ட் ரேஷன் கார்டை 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

TN Ration Card Download : அரசின் ரேஷன் பொருட்களை வாங்க தேவையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை நீங்களே ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

1 /10

தமிழ்நாடு அரசின் குறைந்த விலையில் வழங்கக்கூடிய அரிசி,  எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு உங்களிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும்.

2 /10

முன்பெல்லாம் புத்தக வடிவில் இருந்த தமிழ்நாடு அரசின் ரேஷன் கார்டுகள் இப்போது ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன. உங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் TNPDS வெப்சைட்டுக்கு சென்று ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

3 /10

வீட்டில் இருந்தபடியே உங்களுக்கான ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளவும் முடியும். ஒருவேளை உங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அரசின் ஒப்புதலோடு கிடைத்துவிட்டால், அதனை ஆன்லைனில் இருந்து எப்படி டவுன்லோடு செய்வது  என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

4 /10

ஸ்மார்ட் கார்டுகள் பல வகைகள் உள்ளன. காவல்துறை அதிகாரிகளுக்கு, வருமானவரி கட்டுபவர்களுக்கு அடித்தட்டு மக்களுக்கு என ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வகையான கார்டுகள் இருக்கின்றன. 

5 /10

தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வெளிர் பச்சை நிறத்தில் ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சரி, இப்போது இந்த கார்டை வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். 

6 /10

முதலில் ரேஷன் அட்டை மற்றும் புகார்கள் தொடர்பாக பதிவு செய்யக்கூடிய தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNPDS பக்கத்துக்கு செல்ல வேண்டும். 

7 /10

அங்கு, தமிழில் "பயனாளி" என்றும், ஆங்கில மொழியில் பார்க்கிறீர்கள் என்றால் "Beneficiary" என்ற ஆப்சனும் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

8 /10

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தபோது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு "Request an OTP" ஆப்சனை கிளிக் செய்யவும்.

9 /10

இப்போது உங்களுடைய ஸ்மார்ட் கார்டு திரையில் காண்பிக்கும். "ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஸ்மார்ட் கார்டை உங்கள் மொபைல் சாதனத்தில் PDF ஆகப் பதிவிறக்கி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

10 /10

தமிழ்நாட்டு மக்கள் இந்த வழியில் எளிமையாக தங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டை வெறும் 2 நிமிடத்தில் பெற்றுக் கொள்ளலாம். மற்ற மாநில மக்களுக்கு இந்த செயல்முறை வேறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது.