Diabetes Management Diet: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்தப் பழத்தை உங்கள் டயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்... ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்சத்திரப் பழம் எப்படியெல்லாம் உதவுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த ஸ்டார் பழத்தின் தோலையும் உண்னலாம். லேசான கசப்பான சுவையில் இருந்தாலும், பல நோய்களை ஒண்டவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது விளிம்பி எனப்படும் ஸ்டார் ஃப்ரூட்.
உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு நேரடி காரணிகளாக இருக்கின்ரன. நமது உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்துவிடும்
அனைத்து பழங்களிலும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் ஆரோக்கியமான பழங்கள் பற்றிய முழு செய்தியும் அனைவருக்கும் தெரிவதில்லை
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழம் என்றால், ஊட்டச்சத்து அதிகமுள்ள பழங்களில் சில அவற்றில் இடம்பெறாது. ஆனால், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பழங்கள் பட்டியலில் ஸ்டார் ஃப்ரூட் எனப்படும் விளிம்பிப்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு
நட்சத்திரப் பழத்தில் நார்ச்சத்து, புரதம், கார்ப்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி5, ஃபோலேட், தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கல் பொதிந்துள்ளன
சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் சர்க்கரை நோயாளிகளுக்கு நட்சத்திரப் பழம் நல்லது. சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. உடலால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனான இன்சுலின், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது
நட்சத்திர பழம் குறைந்த கலோரி பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, எடை குறைக்க உதவுகிறது. குறைந்த கலோரி இருப்பதால் விளிம்பிப்பழத்தை அதிக அளவு உண்டாலும் எடை அதிகரிக்காது
மலச்சிக்கல் பிரச்சனைகள் அதிக நார்ச்சத்து கொண்ட நட்சத்திரப் பழம், நீரிழிவு அல்லது கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தேர்வாகும். நட்சத்திரப் பழத்தில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளின் மலச்சிக்கல் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது
சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது ஸ்டார் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு பொலிவை சேர்க்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. நட்சத்திரப் பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி, தோல் வெடிப்புகளைக் குறைக்கவும், சருமத்தை மெனமியாக்கவும் உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நட்சத்திரப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. 90 கிராம் நட்சத்திரப் பழத்தில் 52 சதவிகிதம் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது