எலும்புகளில் கால்சியம் சத்து சேர்வதை தடுக்கும்... ஆக்ஸலேட் நிறைந்த சில காய்கறிகள்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிக அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமாகி விடும். இதனால், மூட்டு வலி, கீல் வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதோடு எலும்பு முரிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

  • Oct 02, 2024, 09:05 AM IST

எலும்புகள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, டயட்டில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக அவசியம். அதே சமயம்,   எலும்புகளில் இருந்து கால்சியம் சத்து செர்வதை தடுத்து, அதனை பலவீனப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் சில காய்கறிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1 /8

Bone Health: உடலின் அமைப்புடன் இணைந்து இருக்கும் சிறியது முதல் பெரியது வரை உடலில் இருக்கும் ஒவ்வொரு எலும்பும், உடல் இயக்கத்திற்கு இது மிகவும் முக்கியமானது. எலும்புகள் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் ஆனது. அவை  வலுவாக வைத்திருக்க, இந்த சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியம்.

2 /8

காய்கறிகள் அனைத்துமே ஆரோக்கியமான பண்புகள் நிறைந்தது தான். அதில மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதிக அளவு ஆக்சலேட் உள்ள சில காய்கறிகள் கால்சியம் சத்து எலும்புகளில் சேர்வதை தடுக்கும். அந்த வகையில் எலும்புகளுக்கு எதிரியாகக் கருதப்படும் இந்த 5 காய்கறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

3 /8

பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கீரை எலும்புகளுக்கு ஆரோக்கியமானதல்ல. இதில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது, இது கால்சியத்தை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே இதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது எலும்புகளின் வலிமை பாதிக்கப்படும். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் கீரையை அடிக்கடி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4 /8

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகிய காய்கறிகள் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருந்தாலும், அதில் உள்ள கோய்ட்டர்ஸ், எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கிறது. எனவே, கோஸ் வகை உணவுகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது எலும்புகளை பலவீனத்தை ஏற்படுத்தும்.

5 /8

தக்காளியில் உள்ள சோலிசின் உடல் கால்சியத்தை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, அதிகப்படியான தக்காளி நுகர்வு உடலில் அமில சமநிலை பாதிக்கும். இது எலும்புகளில் இருந்து கால்சியம் சத்து வெளியேற வழிவகுக்கும்.

6 /8

பீட்ரூட்டில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனை குறைக்கலாம், இது எலும்புகளின் வலிமையை பாதிக்கிறது.

7 /8

காய்கறிகள் அனைத்துமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், எனவே அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அளவிற்கு அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம். ஆக்சலேட்டுகளைக் கொண்ட உணவுகளை ஊறவைப்பதும், வேக வைப்பதும் அவற்றில் உள்ள ஆக்சலேட்டுகளின் அளவைக் குறைக்க உதவும். 

8 /8

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)