புரோட்டின் வேணும்... ஆனால் சிக்கன், பீப் வேணாமா... அப்போ இந்த சைவ உணவை சாப்பிடுங்க!

Health Benefits Of Tofu: சைவ உணவுக்காரர்கள் தங்களுக்கு புரதச்சத்து தேவைக்காக பன்னீரை போலவே இருக்கும் இந்த டோஃபுவை உண்ணலாம். டோஃபுவில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம். 

பன்னீர் தெரியும் அது என்ன டோஃபு என கேட்கிறீர்களா... அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குதான்... டோஃபு (Tofu) எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது, டோஃபு சாப்பிடுவதால் வரும் நன்மைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 

 

 

1 /8

உடலுக்கு பல வகையான ஊட்டசத்துகள் தேவை என்றாலும் புரதச்சத்து அதில் மிக முக்கியமானது எனலாம். உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், ஆற்றலும் இருக்கச் செய்ய புரதம் தேவையாகும்.   

2 /8

புரதச்சத்து குறைவாக இருந்தால் அதிக பசி எடுக்கும், தோலில் வறட்சி ஏற்படும், தலை முடி கொட்டும், மிகவும் பலவீனமாக உணர்வீர்கள், எப்போதும் சோர்வாகவே இருப்பீர்கள். எனவே, புரதச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி ஆகியவற்றில் நல்ல புரதச்சத்து இருக்கிறது.   

3 /8

சைவ உணவை மட்டும் உண்பவர்கள் பெரிதும் புரதச்சத்து குறைபாட்டை சந்திப்பார்கள். அந்த வகையில் அவர்கள் பன்னீர் மற்றும் டோஃபு ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். பன்னீர் தெரியும் அது என்ன டோஃபு என கேட்கிறீர்களா... அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குதான்.   

4 /8

டோஃபு என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை போன்றது. இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாக உலகம் முழுவதும் உட்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், டோஃபுவில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அதை உண்பதால் ஏற்படும் நன்மைகல் குறித்து இங்கு காணலாம்.  

5 /8

100 கிராம் டோஃபுவில் 9 கிராம் புரதம் உள்ளது. இதில் 67 கிரோம் கலோரிகள் உள்ளன. அதேபோல் 121 மில்லிகிராம் பொட்டாஸியம், 7 மில்லிகிராம் சோடியம், 0.3 கிராம் நார்ச்சத்து  உள்ளது. கூடவே அதில் கால்சியம் (35%), இரும்புச்சத்து (30%), மேக்னீஸியம் (7%) உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன.  

6 /8

இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் இருப்பது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல ஆப்ஷன் ஆகும். மேலும் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு இது நல்லது. இதனால் எலும்புப்புரை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.   

7 /8

அதேபோல், நார்ச்சத்து  இருப்பதால் உடலின் செரிமான அமைப்பை சீராக்குவதில் உதவுகிறது. மேலும் மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால் மூளை செயல்பாடும் நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் ஊடக தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை நீங்கள் பின்பற்றும் முன்னர் முறையாக மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.