புரதம் என்பது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். அந்த வகையில், புரதம் அதிகமாக உள்ள 7 பழங்களை இங்கு காணலாம்.
பழங்களை அப்படியே சாப்பிடலாம். ஜூஸாக போட்டுக் குடித்தால் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் குறைந்துவிடும்.
பலாப்பழம்: இதில் அதிக புரதம் உள்ளது. வைட்டமிண் சி, போட்டாஸியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவையும் உள்ளது.
கிவி: இந்த பழத்தில் அதிகமாக வைட்டமிண் சி உள்ளது. அதில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
ஆப்ரிகாட்: இந்த பழத்தில் வைட்டமிண் ஏ, வைட்டமிண் சி, நார்ச்சத்து, புரதம் ஆகியவை உள்ளது.
பிளாக்பெரீஸ்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமிண் மற்றும் புரதமும் உள்ளது.
கொய்யாப்பழம்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. கூடவே வைட்டமிண்கள், கனிமங்கள், புரதம் ஆகியவையும் உள்ளது.
அவகாடோ: இதில் கொழுப்புச் சத்து இருந்தாலும், நார்சத்து மற்றும் புரதமும் இருக்கிறது.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும்.