48 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை ரம்பா..அழகின் பின்னணி இதுதானா?

Rambha's Youthful Appearance: 48 வயதான நடிகை ரம்பாவின் இளமையான தோற்றம் அவரது ரசிகர்களை எப்போதும் ஆச்சரியப்படுத்துகிறது. அவர் தன் அழகையும் இளமையும் பராமரிக்கத் தொடர்ந்து சில பழக்கங்களைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறார். ரம்பா, தினசரி வாழ்க்கையில் சரியான பழக்கவழக்கங்களுடன் உடல் மற்றும் மனதைப் பராமரித்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர் தவறாமல் பின்பற்றும் இந்த பழக்கங்கள் இவரை 48 வயதிலும் இளமையாகவும், பொலிவுடனும் காட்டுகிறது.

 

Actress Rambha's Daily Habits: 48 வயதில் ரம்பா தன் அழகையும் இளமையும் எவ்வாறு பராமரிக்கிறார் என்ற விஷயம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இவர் தன் வயது ஒரு விஷயம் அல்ல என்று கூறுகிறார். அழகும், பொலிவும் அவர் செய்யும் தினசரி பழக்கத்திலிருந்து வந்ததாம். அதுமட்டுமல்லாமல் அவர் எப்போதும் சிரித்த புன்னகையுடன் இருப்பதற்கும் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார். இதுபோன்று ரம்பா தன்னுடைய அழகை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்கிறார் என்று நாம் பார்ப்போம். 

1 /8

உடற்பயிற்சி(Exercise): ரம்பா தனது உடலைக் கட்டுக்கோப்பாகப் பராமரிக்கத் தினமும் உடற்பயிற்சி செய்கிறார். இந்த பயிற்சிகள் அவரது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக நம்புகிறார். 

2 /8

சரியான உணவுப் பழக்கங்கள்(Proper eating habits): ரம்பா தனது தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்கிறார். அவரது உணவில் குறிப்பாகக் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகை உணவுகள், தானிய வகை உணவுகள் மற்றும் பழங்கள் போன்றவை கட்டாயம் இருக்குமாம். 

3 /8

நல்ல தூக்கம்(Good sleep): உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கத் தினமும் 7-8 மணிநேர தூக்கம் கட்டாயம் தூங்குவாராம். இது அவரின் அழகான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறுகிறார்.

4 /8

தண்ணீர் குடிப்பது(Drinking water): அதிகம் தண்ணீர் குடிப்பது அவரின் முக்கிய பழக்கத்தில் ஒன்றாக உள்ளது. இதனால் மென்மையான சருமம், இளமையான தோற்றம் இருக்க உதவுவதாகக் கூறுகிறார்.  மேலும் சுறுசுறுப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கத் தண்ணீர் முக்கியமானதாகக் கருதுகிறார். 

5 /8

ஆரோக்கியமான முகப்பராமரிப்பு(Healthy facial care): ரம்பா தனது சருமத்திற்கு அத்தியாவசியமான பராமரிப்பைச் செய்யும் வழக்கத்தில் பிரபலமானவர். அவர் தவறாமல் சன்ஸ்கிரீன், கிளீன்ஸர்கள் மற்றும் சரியான ஆலோசனைப்பெற்று சருமத்திற்குப் பொருட்கள் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்.  தினசரி தவறாமல் சருமப் பராமரிப்பு செய்வதால் அவரின் சருமம் ஈரப்பதமாகவும் மற்றும் இளமையாகவும் காட்சியளிப்பதாகக் கூறுகிறார். 

6 /8

மனநிலை மற்றும் மன அமைதி(Mood and peace of mind): ரம்பா தனது மன அழுத்தத்தை குறைக்கத் தினசரி யோகா மற்றும் தியானம் செய்யும் பழக்கத்தில் தன்னை ஈடுப்பத்திக்கொள்வதாகக் கூறுகிறார். இது அவரின் மனம் சார்ந்த அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பதாகக் கூறுகிறார். 

7 /8

மிகவும் குறைவான மேக்கப்(Very little makeup): ரம்பா இயற்கையான அழகை அதிகம் பராமரிக்க விரும்புகிறார். அவர் மேக்கப்பில் மிகக் குறைவான பொருட்களைப் பயன்படுத்தி அழகு மாறாமல் தனது இயற்கை அழகைப் பாதுகாப்பதாகக் கூறுகிறார். 

8 /8

எல்லா விஷயங்களையும் நன்றாகச் செய்தல்(Doing all things well): ரம்பாவின் மற்றொரு முக்கிய பழக்கம் அது அவர் அவருடைய தினசரி செயல்களில் எப்போதும் 100% கவனம் செலுத்துவாராம். எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற  மனப்பான்மையை ரம்பா தீவிரமாக கடைப்பிடிப்பாராம்.