7 Signs That Says You Are Mentally Stronger : ஒரு சில அறிகுறிகள், நீங்கள் நினைப்பதை விட உங்களால் வலிமையாக இருக்க முடியும் என்பதை காண்பிக்கும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
7 Signs That Says You Are Mentally Stronger : அனைவருக்கும் மன உறுதி என்பது இருக்க வேண்டிய ஒன்றாகும். மன வலிமை இல்லை என்றால், நம்மை நோக்கி வரும் எந்த விஷயத்தையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே, ஒருவர் மனதளவில் எதையும் எதிர்த்து போராடும் தைரியம் மிக்கவராக இருக்க வேண்டும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் மனவலிமை மிக்க ஒருவராக இருப்பீர்கள். அதை சில அறிகுறிகளே உங்களிடத்தில் காண்பிக்கும். அவை என்னென்ன தெரியுமா?
ஒரு சில கடினமான தருணங்கள் வரும் போது, அதிலிருந்து நம்மால் கடந்து வரவே முடியாது என யோசித்து இருப்போம். ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களையும் கடந்து வந்திருப்போம்.
உங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒரு மாதம், அல்லது ஒரு இரவு நன்றாக செல்லவில்லை என்றாலும், அதை கடந்து செல்ல வேண்டும் என நினைப்பீர்கள். எப்படியாவது இதை தாண்டி விட வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
உங்களுக்கு ஒரு உறவு, அல்லது ஏதேனும் ஒரு ஏக்கம் வலி கொடுத்துக்கொண்டே இருக்கிறது என்றால் அதனை கைவிடுவது, நீங்கள் மனதளவில் வலிமை மிக்கவர் என்பதை காண்பிக்கிறது.
உங்களை சுற்றி இருக்கும் சூழல் மாறும் போது, அதனை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்வீர்கள். அப்படி நீங்கள் நினைப்பவராக இருந்தால், நீங்கள் நினைப்பதை விட உங்கள் மனம் வலிமியாக உள்ளது.
முன்னர், உங்களுக்கு பிறரது அங்கீகாரம் வேண்டும் என தோன்றியிருக்கலாம். ஆனால், இப்போது “யார் என்ன சொன்னால் என்ன” என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். இப்படி இருந்தால், நீங்கள் மன வலிமை மிக்கவர் என்று அர்த்தம்.
ஒரு சிலர், தாங்கள் என்ன உணருகிறோம் என்றே தெரியாமல் சுற்றிக்கொண்டு இருப்பர். நீங்களும் அப்படிப்பட்ட ஆளாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது, உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கைகளில் இருக்கும்.
கடினமான தருணங்கள் வரும் நேரத்திலும், நல்ல தினங்கள் உங்களை நோக்கி வரும் என்ற நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இது, உங்களது வலுவான மன நிலையை காண்பிக்கிறது.