மாசத்துக்கு நாலு முறை வீட்டை மாத்தினா என்ன செய்ய? நவம்பர் மாத புதன் பெயர்ச்சியால் அலுத்துக் கொள்ளும் ராசிகள்!

Mercury Transits November 2024: பணம், தொழில், பேச்சு, தகவல் தொடர்பு, கல்வி கலைகள், ஞானம், அறிவு, சாதுர்யம் என பல விஷயங்களுக்கு காரணியான புதன், நவம்பர் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார்.  

இரு முறை பெயர்ச்சியாகும் புதன், நவம்பர் 2024 இல் தனது இருப்பு நிலையிலும் மாற்றங்களை செய்கிறார். ஒரே மாதத்தில் நான்கு மாற்றங்களை சந்திக்கும் புதன் 6 ராசிகளுக்கு கவலைகளை தருகிறார்  

1 /9

தீபாவளிக்குப் பிறகு ஏற்படும் கிரகங்களின் சஞ்சார மாற்றங்களில் புதனின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. நவம்பரில் புதன் தனது நிலையை 4 முறை மாற்றுகிறார். தற்போது கேட்டை நட்சத்திரத்தில் இருக்கும் புதன், அனுஷ நட்சத்திரத்திற்கு மஆறுகிறார். ராசியில் புதன் பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்குள் நுழைவார். இந்த வகையில் நவம்பரில் புதன் கிரகம் நட்சத்திரம் மற்றும் ராசியை மாதத்தின் முதலிலேயே மாற்றுகிறார்.  

2 /9

நவம்பர் 26ம் தேதியன்று புதன் விருச்சிகத்தில் வக்ரமாகிறார், அதன் பிறகு 30ம் தேதியன்று விருச்சிகத்தில் எரிப்பு நிலைக்கு செல்கிறார். இப்படி இந்த மாதத்தில் மட்டும் புதன் நான்கு முறை தனது நிலையை மாற்றுகிறார். இது 6 ராசிகளுக்கு கவலையை அதிகரிக்கும்

3 /9

மீன ராசிக்காரர்களுக்கு பலவிதமான மனக்குழப்பங்களை புதன் தருவார். இவர்களுக்கு நவம்பரில் பணம் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகள் தட்டிப் போகும். தொழிலிலும் கவனமாக இருக்கவும், வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவது நல்லது

4 /9

கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் சறுக்கலைக் கொடுக்கும் புதன், ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிப்பார். திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாகும். 

5 /9

தனுசு ராசியினருக்கு புதன் சஞ்சாரமும், புதனின் சஞ்சார மாற்றமும் அசுப பலன்களைத் தரும். வாழ்க்கையில் நேர்மறையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் சில மாற்றங்கள் உருவாகலாம். புதிய ஒப்பந்தங்களில் கவனமாக இருக்கவும்.

6 /9

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் நிம்மதியைக் கெடுப்பார். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க காரணமாக இருப்பவர்களிடம் வாயைக் கட்டுப்படுத்தி அளவாக பேசுவது நல்லது. காதல் வாழ்க்கை கசக்கலாம்.

7 /9

சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும் புதன் அதற்கு விடமாட்டார். செய்யும் வேலைகள் இழுபறியாகவே இருக்கும்.  பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றலாம் என்று நினைத்தாலும், செலவுகள் மலை போல் அச்சுறுத்தும்  

8 /9

உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.  உங்கள் பேச்சுக்கள் உங்கள் மீதான அபிப்ராயத்தை உருவாக்கும் என்பதால் வார்த்தைகளை சரியாக பயன்படுத்தவும்

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது