Fruit That Cure Diabetes: சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடக் கூடாது என்று பலர் கூறுகின்றனர். அனைத்து பழத்திலும் இயற்கையான சர்க்கரை சில சதவிகிதம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அந்த பழத்திலும் கிடைக்கும் இயற்கை சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்காது. அப்படி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் குறைந்த சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய பழங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. சிறப்பு என்னவென்றால், இந்த பழங்களில் பெரும்பாலானவை பெர்ரி வகையைச் சேர்ந்தவை. ஏனெனில் அவற்றில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன்காரணமாக, சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சுப் பழத்தை உட்கொண்டால், அது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக ஆற்றலைத் தருகிறது. ஆரஞ்சில் பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பருவகால உணவுகளை உண்பதாலும் இதே போன்ற நன்மைகள் கிடைக்கும்.
இனிப்பு மற்றும் புளிப்பு சுவைக் கொண்ட கிவியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை தினமும் சாப்பிடலாம்.
ப்ளாக்பெர்ரி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பழமாகும். ஏனெனில் இது சுவையாக இருப்பதுடன், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.
பீச் சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிடலாம். இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை சுவை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும்.
ஆப்பிளில் நிறைய சர்க்கரை இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதை அப்படியே ஜூஸ் செய்து குடிக்காமல் பழமாக சாப்பிட்டால், அதிக நன்மை கிடைக்கும்.
ஒரு அவகேடோ பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சுமார் 1 கிராம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகளும் இதில் நிறைந்துள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.