RD சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வங்கிகளின் பட்டியல் இதோ!

RD Interest Rates: பல வங்கிகள் ஐந்து ஆண்டு கால ரெக்கரிங் டெபாசிட்(ஆர்டி) திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது, இதில் கிடைக்கு வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.

 

1 /5

டிசிபி வங்கி:  5 ஆண்டு கால ஆர்டி கணக்குகளுக்கு டிசிபி வங்கி 7.60% வட்டியை வழங்குகிறது. தனியார் வங்கிகளிலேயே இந்த வங்கி தான் ஆர்டி-க்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது.  5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.66 லட்சம் கிடைக்கும்.  

2 /5

சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி :  5 ஆண்டு கால ஆர்டி கணக்குகளுக்கு வங்கி 7.5% வட்டியை வழங்குகிறது.  சிறு நிதி வங்கிகளில் இந்த வங்கி தான் ஆர்டி-க்கு அதிக வட்டியை வழங்குகிறது.  இதில் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.65 லட்சம் கிடைக்கும்.  

3 /5

இன்டஸ்இன்ட் வங்கி : 5 ஆண்டு தவணை கால ஆர்டி கணக்குகளுக்கு வங்கி 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது.  இதில் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.62 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.  

4 /5

ஏயூ மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி : இந்த வங்கிகள் 5 ஆண்டு கால தவணை கொண்ட ஆர்டி கணக்குகளுக்கு சுமார் 7.20% வட்டி விகிதத்தை வழங்குகின்றது.  

5 /5

ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்: ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் 5 ஆண்டு கால ஆர்டி கணக்குகளுக்கு 7% வட்டியை வழங்குகின்றது.  ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்கால முடிவில் ரூ.3.60 லட்சம் கிடைக்கும்.