லீக் ஆன வீடியோ? லிங்க் கேட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை ஓவியா!

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளிவந்துள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கு ஓவியா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

 

1 /6

சமூக ஊடகங்களால் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், சில சமயம் ஒரு தனி நபருக்கு எதிராக திரும்புகின்றன. இணையத்தில் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது அவ்வப்போது நடக்கிறது. தற்போது நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

2 /6

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஓவியாவை டேக் செய்து இந்த வீடியோ பற்றி கேட்டு வந்தனர். இது உண்மையான வீடியோவா? வீடியோவில் இருப்பது நீங்கள் தானா? போன்ற பல கேள்விகளை கேட்டு வந்தனர்.  

3 /6

இந்த கேள்விகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் ஓவியா பதிலடி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர், "உங்களின் 17 வினாடி வீடியோ லீக் ஆனது மேடம்" என்று கருத்து தெரிவிக்க, அதற்கு ஓவியா "என்ஜாய்" என்று பதிலளித்துள்ளார்.  

4 /6

மற்றொரு பயனர், "வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா" என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஓவியா, 'அடுத்த முறை ப்ரோ' என கூலாக பதில் அளித்துள்ளார்.   

5 /6

மேலும் சமூக ஊடகங்களில் பலர் ஓவியாவின் லீக் ஆனா வீடியோவை தனக்கும் அனுப்புமாறு கேட்டு வருகின்றனர். இதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தனக்கும் லிங்க் அனுப்புமாறு ஓவியா பதிவிட்டுள்ளார்.  

6 /6

பொதுவாக நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானால் அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிப்பார்கள். ஆனால் ஓவியா இதனை வேறு விதத்தில் டீல் செய்து வருகிறார்.