காஜல் அகர்வாலின் ஜெராக்ஸாக இருக்கும் அவரது தங்கை!! வைரல் போட்டோக்கள்..

Kajal Aggarwal And Her Sister Nisha Agarwal Viral Photos : தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், அவரது தங்கையுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

Kajal Aggarwal And Her Sister Nisha Agarwal Viral Photos : தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து, தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நாயகி காஜல் அகர்வால். பழனி படம் மூலம் அறிமுகமான இவர், கடைசியாக இந்தியன் 3 படத்தில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்து, இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இவருடையை தங்கை நிஷா அகர்வாலும் திருமணத்திற்கு முன்பு வரை நடிகையாக இருந்தவர்தான். இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை காஜல், இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் இருவரும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கின்றனர். 

1 /8

காஜல் அகர்வால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்தியாவின் பிசியான ஹீரோயினாக வலம் வந்தார். 

2 /8

இவருக்கு 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, 2022ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

3 /8

திருமணம் மற்றும் குழந்தைக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் இருந்து விலகிய அவர், தற்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

4 /8

காஜல் அகர்வாலுக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது பெயர் நிஷா அகர்வால். இவருக்கு 2013ஆம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. 

5 /8

நிஷா அகர்வால் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழிலும், ‘இஷ்டம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

6 /8

நிஷா அகர்வாலுக்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. காஜலும் நிஷாவும் அடிக்கடி தங்களது குடும்பத்தினருடன் சந்தித்துக்கொள்வதுண்டு. 

7 /8

நிஷா அகர்வாலின் பிறந்தநாளையொட்டி அவரது அக்கா சில புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 

8 /8

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.