பெருமாளை வணங்குவதற்கு முன்பு கருடாழ்வாரை வணங்குவது ஏன்? கருட பஞ்சமி திருநாள் பூஜைகள்!

Garuda Panchami 2024 : பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாருக்கு கருட பஞ்சமி வழிபாடு! பெருமாளின் வாகனமான கருடனை வணங்கிய பிறகு தான், ஆலயத்தில் உள்ள விஷ்ணுவை வணங்க வேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கருடனுக்கான நாள் கருட பஞ்சமி...

வானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் கருடனை தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் ஒருவர் பிறவி எடுத்ததற்கான பிறவிப் பயனைத் தரும் என்பது ஐதீகம்

1 /9

தன்னுடைய தாயை காப்பாற்றிய கருடரின் வல்லமையையும் புத்திசாலித்தனத்தையும் மெச்சிய கடவுள் விஷ்ணு, கருடனை தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கவும் நிம்மதியாய் வாழவும் கருட வழிபாடு உதவும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை  

2 /9

கருட பஞ்சமியன்று நாகங்களுக்கும் பூஜைகள் செய்வார்கள். கருடனின் மாற்றாந்தாய் பிள்ளைகள் அதாவது பங்காளிகளான நாகங்களை கருட பஞ்சமியில் வழிபடுகிறோம். கருடன் குடும்பத்தில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு என்பதை உணர்த்தும் வகையில் கருட பஞ்சமியில் நாக வழிபாடும் செய்யப்படுகிறது  

3 /9

தனது மாற்றாந்தாய் கத்ருவிடம் தோற்றுப்போய் அடிமையாய் மாறிய தனது தாய் வினதையின் அடிமைத்தளையை நீக்க கருடன் எடுத்த முயற்சியில், கருடனின் திறனைப் பார்த்து தான் பெருமாள் அவரை தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். அதனால் தான்,  பெரிய திருவடியாக மாறி பெருமாளை தாங்கும் வாய்ப்பு கருடருக்கு கிடைத்தது என்பதால், கத்ருவின் பிள்ளைகளான நாகர்களையும் வணங்கும் வழக்கம் வந்தது  

4 /9

பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரங்களில் கருடனின் திருஉருவம் காணப்படும். பெரிய திருவடி என்று போற்றி வணங்கப்படும் கருடன், பெருமாளின் வாகனமாகவும், கொடியை காக்கும் காவல்தெய்வமாகவும் வணங்கப்படுகிறார்

5 /9

கருடன் பெருமாளுக்கு வாகனம் என்றால், வாயு தேவன் கருடரின் வாகனம் ஆவார்

6 /9

கருட பஞ்சமி நாளான இன்று கருடனை வணங்குவது என்பது பெருமாளை வணங்குவதற்கு சமமானது. வழக்கமாகவே விஷ்ணுவின் கோவிலுக்கு செல்லும்போது, முதலில் கருடனை வணங்கிய பிறகே பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது மரபு

7 /9

வானில் பறக்கும் கருடரைப் பார்த்தால் அங்கு பெருமாளும் இருப்பதாக நம்பிக்கை. 

8 /9

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவியே இருக்காது என வைணவர்கள் நம்புகின்றனர் 

9 /9

பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது