65 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் சுமார் 10-20% அளவு அறிவாற்றல் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது, இதனை தடுக்க உணவுப்பழக்கத்தை மாற்றலாம்.
சால்மன், டுனா மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. மூளை 60% கொழுப்புகளால் ஆனது, அதில் பெரும்பாலானவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள். இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும், இது 65 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெரியவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
ஆளி விதைகளில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், குறிப்பாக ஒமேகா -6 மற்றும் ஒமேகா -3 ஆகியவை நிறைந்துள்ளன. வயதானவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அறிவாற்றல் அதிகரிக்கும்.
புளுபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ளன, அவை அறிவாற்றலை மேம்படுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இது வையாது முத்துவின் காரணமாக ஏற்படும் மூளையின் மந்தத்தன்மையை நீக்குகிறது.
வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்றன, எல்லாவிதமான காய்கறிகளும் உடலுக்கு நன்மையை அளிக்கின்றன. வைட்டமின் கே அதிகமுள்ள ப்ரோக்கோலி போன்றவற்றை சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக்கும்.