Brothers Day 2023: பாசமலர் டூ மாற்றான்..சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

Brothers Day Movies: இன்று சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் சகோதர பாசத்தை மையமாக வைத்து வெளிவந்த சில படங்களை பார்க்கலாம்.  

Written by - Yuvashree | Last Updated : May 24, 2023, 06:27 PM IST
  • இன்று சகோதரர் தினம்.
  • சகோதரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள்.
  • பாசமலர் டூ மாற்றான் முழு லிஸ்ட்.
Brothers Day 2023: பாசமலர் டூ மாற்றான்..சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள் title=

அவ்வப்போது அடித்துக்கொண்டாலும் கடித்துக் கொண்டாலும் நமது சகோதரனுக்கு இணை, சகோதரன்தான். பாசம் இல்லாதது போல வெளியில் காட்டிக்கொண்டாலும் அவர்களுக்குள்ளும் காட்டருவி போல பாசம் கொட்டிக்கிடக்கும். அப்படி சகோதர பாசத்தை மையமாக வைத்து வெளியான சில படங்களை பார்க்கலாமா? 

பாசமலர்

பாசமலர் 1961 பீம் சிங் இயக்கத்தில் வெளிவந்தது,  அண்ணன் -தங்கையின் பாசத்துக்கும், எதன்பொருட்டும் அறுபடாத அதன் தொடர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் இடம் எத்தனை உன்னதமானது என்பதை பேசாத கலை வடிவங்களே இல்லை. என்றாலும் திரையில் அது ‘பாசமல’ராக மலர்ந்தபோது, உச்சிமுகந்து கொண்டாடினார்கள் தமிழர்கள். ‘பாசமலர்’ படைத்த சாதனைகளால், என்றைக்கும் வாடாத மலராக மணம் பரப்பிக்கொண்டிருக்கும் அந்த படைப்பின் பின்னால், தங்களுடைய ஆகச் சிறந்த பங்களிப்பைத் தந்த ஆளுமைகள் நம்முடைய நினைவுகளில் நீங்காமல் இருக்கிறார்கள்.

அபூர்வ சகோதரர்கள்

அபூர்வ சகோதரர்கள் 1989 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த, இப்படத்தில் ஒரு கமல் உயரத்துடனும் இன்னொரு கமல் தன் உயரம் குறைவாகவும் இருப்பர்.  இன்று வரை கமல் அதை எப்படி செய்தார் என பலரும் சிந்தித்து வருகின்றனர். குள்ளமாக உயரத்தை குறைத்து கொண்டு நடிப்பது மட்டுமன்றி, முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் உரித்து வைத்திருப்பார் நம்ம உலகநாயகன். 

மேலும் படிக்க | Nitesh Pandey: பாலிவுட்டை துரத்தும் சோகம்..ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்தி சீரியல் நடிகர்..!

வாலி
 
வாலி 1999ஆம்  ஆண்டு s.j சூர்யா  இயக்கத்தில்  வெளிவந்தது . இது ஒரு சைக்கோ ரொமான்டிக் படம். இரட்டை பிறவிகளான அண்ணன் தம்பிக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. இப்படத்தில் தம்பியின் மனைவி ஆசைகொள்ளும் அண்ணன்,  தம்பியின் மனைவிக்கும் அண்ணனுக்கு இடையிலான போராட்டமே  வாலி.  

ஆளவந்தான்

ஆளவந்தான் 2001ஆம் ஆண்டு  சுரேஷ் கிஷ்ணா இயக்கத்தில்  வெளிவந்தது  
இது ஒரு சைக்கோ கொலையாளி படம். இதுவும் அண்ணன் தம்பி படங்களில் கதைக்களமாக  தான் இருக்கிறது.  ஆளவந்தான் சொன்ன கதை வேறு, எடுத்த கதை வேறு, வெளியான கதை வேறு. அது ஒரு குழப்பமான கதை. இரண்டே முக்கால் மணி நேரப் படம். “20 வருடம் கழித்து வர வேண்டிய கதையை அவர் முன்னரே சிந்தித்துவிட்டார். அந்தப் பரிசோதனை முயற்சியை அவரே தயாரித்திருக்கலாம். என்னைத் தயாரிக்க வைத்துவிட்டார். ஆனால், அந்த 'ஆளவந்தான்' படத்தை நான் மீண்டும் மாற்றி எழுதப்போகிறேன். நானே அந்தப் படத்தை எடிட் செய்து மீண்டும் வெளியிட்டு, ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்" என்று தாணு கூறியுள்ளார்.

இம்சை அரசன்

இம்சை அரசன் 23 புலிகேசி 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது ஒரு PERIODICAL  FILM. அதாவது, அரசர்  காலத்து கதை. தற்போது நடக்கும் சமூக அவலங்கள் இப்படத்திவ் நகைச்சுவையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக ஜாதி சண்டை. மன்னர்களையும் மன்னர் ஆட்சி சமூகத்தையும் அந்தக் கால வாழ்க்கைமுறையும் விதந்தோதிய பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அவலங்களையும் அபத்தங்களையும் பகடி செய்து மிகை புனைவுகளைக் கட்டுடைத்த முதல் திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'.

மாற்றான்

மாற்றான் 2012 ஆம்  ஆண்டு கே வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்தது. வித்திாசமாக ஒட்டிப்பிறந்த இரட்டைய்களின் கதையை இப்படத்தில் கூறியிருந்தனர். சூர்யா, இரண்டு வேடங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மார்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  உருவாக்கப்பட்ட   திரைப்படம் இது. 

மேலும் படிக்க | John Wick 4: ஓடிடியில் வெளியாகிறது ஜான் விக் 4..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News