நதிகளிலே நீராடும் சூரியன் என்ற டைட்டிலை கொண்டு அறிவிக்கப்பட்ட சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தனது உடல் எடையை மாற்றி மாஸாக ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் சிம்பு (Simbu). இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து வெளியீட்டுக்காக வேளையில் அப்படக்குழு இறங்கியுள்ளது.
ALSO READ | Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது
இதற்கிடையில் சிம்பு மற்றும் கவுதம் மேனன் (Gautham Vasudev Menon) கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு நதிகளிலே நீராடும் சூரியன் எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு 'வெந்து தணிந்தது காடு' என்று பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக படக்குழு வைத்துள்ளது.
Here’s the title and first look of the new film with @TRSilambarasan @arrahman @IshariKGanesh@VelsFilmIntl
@Ashkum19
Thank you to everybody who made this possible pic.twitter.com/6LY9icJuSd— Gauthamvasudevmenon (@menongautham) August 6, 2021
இதற்கிடையில் இந்த படத்தில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.
ALSO READ | 3:33 Teaser: சாண்டி மாஸ்டர் நடிக்கும் 3:33; திகில் ஏற்படுத்தும் டீசர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR