பாலிவுட்டின் வாரிசு நட்சத்திரங்களான ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நட்சத்திர ஜோடிகளின் திருமணம் ஏப்ரல்-17ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் திருமண கொண்டாட்டத்தில் பங்குவேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல்-13ம் தேதி முதல் ஏப்ரல்-17ம் தேதி வரை நடக்கும் இந்த திருமண நிகழ்வுகளில் குடும்பத்தார்கள் சங்கீத், மெஹந்தி விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!
மேலும் ஏப்ரல் மாத இறுதியில் தொழிற்துறை சார்ந்த நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் திருமண வரவேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். நடிகை ஆலியா திருமணத்திற்கு மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி ஆகியோர் டிசைன் செய்த உடையை தான் அணிந்துகொள்ள இருக்கிறார். ரிஷி கபூர் மற்றும் நீத்து கபூர் ஆகியோரின் திருமணம் போல ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் திருமணமும் செம்பூரில் உள்ள ஆர்கே இல்லத்தில் நடைபெற இருக்கிறது.
ஆலியாவின் தாய்வழி தாத்தாவான என்.ரஸ்தான் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, தான் இறப்பதற்குள் ஆலியா மற்றும் ரன்பீரின் திருமணத்தை பார்க்க வேண்டுமென மிகுந்த ஆசையில் இருக்கிறாராம். ஏற்கனவே அவருக்கு ரன்பீர் மீது அதிக பிரியம் உள்ளது, அதனால் அவருடன் ஆலியா இணைவதில் ரஸ்தானுக்கு அதிக விருப்பம் உள்ளது. இவரின் உடல்நிலை கருதியே இவர்களின் திருமணத்தை எளிய முறையில் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | மும்பையில் வீடு வாங்கும் சமந்தா! விலை இதனை கோடியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR