தமிழின் முன்னணி இயக்குநராக உயர்ந்திருப்பவர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த அவர், அடுத்த படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்தப் படம் 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்தது. இதனால், இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார். அவரும் இளைய தளபதி விஜய்யும் கூட்டணி அமைத்த படம் பீஸ்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை படுமோசமாக இருந்ததாக நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஸ்டாரை நெல்சன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதனால், சூப்பர் ஸ்டார் நடிப்பில் தலைவர் 169 படத்தை இயக்கும் அவர், திரைக்கதை எழுதவில்லை. அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதுகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதேநேரத்தில், நெல்சன் திலீப்குமாருக்கு திரைவட்டாரத்தில் இருந்தும், ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு குரல்களும் எழுந்தன.
விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமாருக்கு வெளிப்படையாக சப்போர்ட் செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் மாஸாக இருக்கும் என்றும், நெல்சன் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில், பீஸ்ட் படத்துக்காக பாலிவுட் என்டிரியை நெல்சன் திலீப்குமார் இழந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அவருடைய இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | தொடர் வசூல் வேட்டை - கோலிவுட்டின் ஆல்டைம் பெஸ்ட்டாகிறதா கமலின் விக்ரம்?
நயன்தாரா கதாப்பாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பாலிவுட்டில் இயக்குமாறு நெல்சன் திலீப்குமாரிடம் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டதாம். ஆனால், பீஸ்ட் படத்தில் கமிட்டானதால், இந்தியில் இயக்கும் வாய்ப்பை கைவிட்டுவிட்டாராம். பீஸ்ட் இல்லை என்றால், இப்போது பாலிவுட்டிலும் கால்பதித்திருப்பார் நெல்சன் திலீப்குமார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR