ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் கருப்பு உருவம் தாராவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அவள் கத்தி ஒன்றை எடுத்துக் கொடுத்து இனி அந்த விக்ரமை விடக்கூடாது காலி பண்ணிடு, என்று சொல்ல கருப்பு உருவம் அங்கிருந்து கிளம்ப அந்த நேரம் பார்த்து சங்கரபாண்டி உள்ளே வர பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறான்.
மேலும் படிக்க | Thalapathy 68 அப்டேட்! 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல ஹீரோ?
பிறகு சங்கரபாண்டி பேசி முடித்து வெளியே சென்றதை மாரி ரூமில் இருக்கும் போது சூர்யா தூக்கத்திலிருந்து எழுந்து என்ன மாரி ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்ன? என்னாச்சு என்று கேட்க ஹஸ்பண்டு சார் தேவி அம்மா உங்களை பாக்கணும்னு வந்தாங்க, ஆனா நீங்க தூங்கிட்டிங்க அவங்க உங்களை எழுப்ப முயற்சி செய்தும் நீங்க எழுந்துக்கவே இல்லை என்னாச்சுன்னு தெரியல என்று சொல்ல சூர்யா அம்மா என்னை பார்க்க வந்தாங்களா? என்னால பார்க்க முடியாமல் போயிடுச்சு என வருத்தப்படுகிறான்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா மற்றும் ஜாஸ்மின் இருவரும் ஒரு உரலை கொண்டு வந்து அதை வேகமாக சுற்றும் போட்டி நடத்துகின்றனர். இந்த போட்டியில் மாரியின் தலையில் இடிக்க வைத்து அவளுக்கு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிடுகின்றனர். மாரி மற்றும் ஜாஸ்மின் இருவரும் இந்த போட்டியில் எதிரெதிராக கலந்து கொள்ள அடுத்து நடக்கப் போவது என்ன? வெற்றி யாருக்கு ஜாஸ்மினின் சதி திட்டம் வெல்லுமா? என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்…!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ