Happy Fathers Day 2024 Toxic Dads Of Tamil Cinema : இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் எப்படிப்பட்ட தந்தையாக இருக்கக் கூடாது என்பதை சில தமிழ் சினிமா தகப்பன் கதாபாத்திரங்களில் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று கூறுவர். இப்படியே நாம் வழிவழியாக கடைப்பிடித்து வந்தாலும் ஒரு சில நேரங்களில் அனைத்து தகப்பன்களும் அனைவருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. எல்லா அப்பாக்களும் அவர்களின் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாக்களா என்று கேட்டால் அது பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் கூட சில அப்பாக்களின் கேரக்டரை கடைசியில் நல்லவர்களாக காண்பித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட டாக்ஸிக் அப்பாக்களின் கதாபாத்திரங்களை இங்கு காணோம்.
புன்னகை தேசம்:
அடிக்கடி பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபலமான படங்களை ஒன்று புன்னகை தேசம். இதில் தருண்குமார், சினேகா, தாமு, பிரீத்தா விஜயகுமார், குணால் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இதில், குணாலிற்கு தந்தையாக நடித்திருப்பார் நிழல்கள் ரவி. தன் மகன் எதற்கும் உதவாதவன் என்று கூறுவதற்கு முன் இவரே பிறரிடம் சென்று அதை கூறுவார். தாமுவின் தந்தையாக வருபவரும் இப்படியே நடித்திருப்பார். தன் பிள்ளைகளை தண்டு சோறு தண்டசோறு என்றே திட்டுவர். இறுதியில் அவர்களுக்கு வெற்றி கிட்டியவுடன் வந்து சேர்ந்து கொள்வர். படத்தின் இறுதியில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் காட்சிகளை வைத்திருப்பர். தமிழ் சினிமாவின் டாக்ஸிக் அப்பாக்களுள் இவர்களும் அடங்குவர்.
காதல்:
பல இளம் தலைமுறையினர் காதலிக்கவே பயப்படுவதற்கு காரணமாக இருந்தவர் காதல் தண்டபாணி. இந்த படத்தில் அவரது பெயர் ராஜேந்திரன். என் மகள் காதலித்து விட்டாள் என்பதற்காக, காதலித்த பையனின் தலையில் இழுத்து வந்து கல்லை போட்டு பைத்தியமாக்குவார். அந்த அளவிற்கு சாதி வெறி அல்லது காதலுக்கு எதிரான வெறி பிடித்த மனிதராக இருக்கவே கூடாது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
எம்டன் மகன்:
தந்தையர் தினம் வந்தாலே வைரலாகும் ஒரே நேம் டெம்ப்லேட் எம்டன் மகன் படத்தின் நாசர்தான். படத்தின் ஆரம்பத்திலிருந்து தனது பிள்ளையை கரித்துக் கொட்டி இதுதான் பாசம் என்று வளர்க்கும் அவர் இறுதியில் மனம் திருந்தி வாழ்வதுதான் படத்தின் கதையாக இருக்கும். படத்தில் இறுதியில் அவர் தனது தவறை உணர்ந்தது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், உண்மை வாழ்க்கையில் இப்படி தன் மகனை நடத்தும் அப்பாக்கள் யாரும் திருந்துவதில்லை என்பதே உண்மை.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி:
தாய் மகன் பாசத்தை சிறப்பாக எடுத்துக் கூற பலர் எடுத்துக்காட்டாக கூறும் படம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் ஜெயம் ரவிக்கு தந்தையாக நடித்திருப்பார். தந்தையின் அறிமுகமே படத்தின் பாதிப்பு மேல் தான் இடம்பெற்றிருக்கும். பல வருடங்கள் தன் வாழ்வில் இல்லாமல் இருந்த ஒரு மகன் மீண்டும் வந்த பிறகும் கூட என் மீது எப்படி பாசம் காட்டுவது என்று தெரியாமல் திணறுவார் பிரகாஷ்ராஜ். ஒரு விபத்து நேர்ந்த பிறகு தனக்காக தனது மகன் நிற்பதை பார்த்தவுடன் தான் அவரது மனமே மாறும். இது தவறு என்பது பலரது கூற்று. மகன் தனக்காக ஒன்று செய்தவுடன் தான் ஒரு தந்தைக்கு பாசம் வர வேண்டுமா? என்பது பல்வது கேள்வியாக இருக்கிறது.
சந்தோஷ் சுப்ரமணியம்:
படம் முழுக்க தந்தை மகனுக்கு இடையே இருக்கும் போராட்டம் தான் கதை. தனது மகன் தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, இறுதியில் மனம் திருந்துவதுதான் இப்படத்தின் கதை. தன் மகனுக்கு தான் நினைத்ததை செய்து விட்டால் போதும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்பது பலரது தந்தைமார்களின் கருத்தாக இருக்கிறது. இதை கொஞ்சம் மாற்றி யோசிக்க வைக்கும் படம் தான் சந்தோஷ் சுப்பிரமணியம்.
டான் திரைப்படம்:
சமீப காலத்தில் வெளிவந்த டாக்ஸிக் கதைகள் ஒன்று டான். இந்த படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக சமுத்திரகனி நடித்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து தனது மகனை திட்டி திட்டி வளர்க்கும் தந்தை, தான் படும் துயரங்களை மகனிடம் தெரிவிக்கவே மாட்டார். இதனால், தனது தந்தை வேண்டுமென்றே தன்னை வெறுப்பதாக நினைக்கும் மகன், தந்தையை வெறுக்க ஆரம்பித்து விடுவான். இறுதியில் தந்தை படும் துயரங்களை பார்த்து, அவனது மனம் திருந்தியது போலவும், இத்தனை நாட்கள் தான் தந்தையை தவறாக மகன் புரிந்து கொண்டது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது முறையா? ஒரு விஷயத்தை சொல்லவில்லை என்றால் எதிரில் இருக்கும் நபருக்கு புரியுமா? மகனை இப்படி காயப்படுத்த இது சரியான காரணமா? இதையெல்லாம் படம் பார்த்து விட்டு வந்தவர்கள் கேட்கவே இல்லை. மாறாக, டான் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, இது போன்ற டாக்ஸிக் தந்தைகளை மகிமைப்படுத்தி விட்டனர்.
மேலும் படிக்க | தந்தையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் அசத்தல் அப்பாக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ