ஷங்கர் vs அதிதி ஷங்கர்: அப்பாவுக்கு போட்டியாக மாறிய மகள்! எப்படி தெரியுமா?

Shankar Vs Aditi Shankar : ஷங்கரின் செல்ல மகள் அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு போட்டியாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jan 5, 2025, 11:40 AM IST
  • ஷங்கர் vs அதிதி ஷங்கர்
  • தந்தைக்கு எதிராக மாறிய மகள்..
  • யாரும் எதிர்பார்க்கலையே..
ஷங்கர் vs அதிதி ஷங்கர்: அப்பாவுக்கு போட்டியாக மாறிய மகள்! எப்படி தெரியுமா? title=

Shankar Vs Aditi Shankar : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார், அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகளான இவர், தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதிதி ஷங்கர்:

தமிழின் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர், ஷங்கர். ஜெண்டில்மேன் படம் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்த இவர், அதன் பிறகு பிரம்மாண்ட இயக்குநர் எனும் பெயரை எடுக்கும் அளவிற்கு படங்களை எடுத்தார். ஷங்கர், ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி மற்றும் அர்ஜித் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

மூவரில் முதல் மகள் ஐஸ்வர்யா சினிமாவுடன் பெரிதாக தொடர்பில்லாதவர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதையடுத்து, அதிதி ஷங்கர் விருமன் படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். இவர், எம்.பிபி.எஸ் பட்டம் பெற்றவர். விருமன் படத்தை அடுத்து இவர், சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். ஷங்கருக்கு அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார். இந்த மூன்று பேரில் இப்போதைக்கு சினிமாவில் ஆக்டிவாக இருப்பது அதிதி மட்டும்தான்.

ஷங்கர் vs அதிதி ஷங்கர்!

ஷங்கர், கடந்த 3 ஆண்டுகளாக கேம் சேஞ்சர் படத்தின் வேலைகளில் பிசியாக இருந்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தெலுங்கு மொழில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம், ஒரு வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது.

நியாயப்படி, இந்த பொங்கலுக்கு தமிழில் ரிலீஸாக இருந்த படம், அஜித் நடித்த விடாமுயற்சி. ஆனால், சில காரணங்களுக்காக இந்த படம் வெளியாகாது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் ரேஸில் “நீ-நான்” என முந்திக்கொண்டு மொத்தம் 10 படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் ஒன்று அதிதி ஷங்கர் நடித்த மன்னிப்பாயா திரைப்படம்.

தந்தைக்கு போட்டியாக..

சமீபத்தில் நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதை தொகுத்து வழங்கிய பாலா, அதிதி ஷங்கரிடம் ஒரு கேள்வியை கேட்டார். 
“பொங்கலுக்கு எப்போதும் குடும்ப படம் வரும். ஆனால் இந்த பொங்கலுக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாருடைய படமும் வெளியாகிறது. உங்கள் அப்பாவின் கேம் சேஞ்சர் வருது, உங்களுடைய நேசிப்பாயா வருது” என்றார். இதற்கடுத்து பேசிய அதிதி ஷங்கர், தன்னிடம் கூட பலர், “என்ன ஷங்கர் vs அதிதி ஷங்கரா?” என கேட்டதாக கூறினார். மேலும், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிய அவர், ரசிகர்களுக்கு இந்த பொங்கலில் நிறைய கண்டன்ட் கிடைக்கும் அதற்காகத்தான் என கூறினார். 

Adhithi Shankar

நேசிப்பாயா திரைப்படம்:

நேசிப்பாயா திரைப்படம், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளியின் முதல் படமாகும். இதனை விஷ்ணு வரதன் இயக்கியிருக்கிறார். 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் அவர் கம்-பேக் கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம், காதல்-ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. வரும் ஜனவரி 14ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

மேலும் படிக்க | கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News