நடிகர் விஜய் வாரிசு எனும் படத்தில் நடித்துவருகிறார். நடிகை ரஷ்மிகா மந்தனா முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துவருகிறார்.
விஜய்யின் சமீபகால ஆக்ஷன் படங்களைப் போல அல்லாமல் இது குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிவருகிறதாம். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிவரும் வாரிசு படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகின.
இதில் 3ஆவதாக வெளியான போஸ்டரில் நடிகர் விஜய் பைக்கில் அமர்ந்திருப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பைக் குறித்த பேச்சு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஓட்டும் அந்த பைக் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய் அமர்ந்துள்ள இந்த பைக்கின் பெயர் யெஸ்டி அட்வெஞ்சர் (Yezdi Adventure).
இந்த வகை பைக்கில் Adventure Matte Slick Silve, Adventure Matte Mambo Black மற்றும் Adventure Camo Ranger Camo என 3 மாடல்கள் உள்ளன. வாரிசு படத்தில் நடிகர் விஜய் பயன்படுத்தியுள்ள மாடல் பைக்கின் தற்போதைய ஆரம்ப விலையே சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாம்.
மேலும் படிக்க | வெளியானது ‘வாரிசு' 4th LOOK- ஸ்டைலிஷ் விஜய்யின் புகைப்படம் வைரல்!
Thalapathy signs off in style #VarisuThirdLook. #Varisu#HBDDearThalapathyVijay
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/ya1SJKvn77
— Sri Venkateswara Creations (@SVC_official) June 22, 2022
இந்த பைக்குகளில் டாப் மாடலின் விலை சுமார் 2 லட்சத்து19 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இவையெல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைகளே. லிட்டருக்கு சுமார் 35 கிலோ மீட்டர் வரை மைலெஜ் கொடுக்கிறதாம் இந்த யெஸ்டி அட்வெஞ்சர்.
வாரிசு படத்தைப் பொறுத்தவரை நடிகர் விஜய் இந்த பைக்கை ஓட்டுவதுபோல இரண்டு காட்சிகள் படத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம். படம் வெளியானதும் இந்த பைக் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR