லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் லியோ. இப்படத்திற்கு மக்களின் வரவேற்பு பலமாகவே கிடைத்துள்ளது. ஆனாலும், ரசிகர்கள் சிலர் படத்தில் உள்ள குறைகளை லிஸ்ட் போட்டு சமூக வலைதளங்களில் விவாத பாெருளாக மாற்றி வருகின்றனர்.
லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ்-விஜய் ஆகியோர் இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ள படம், லியோ. கிட்டத்தட்ட ஓராண்டாக நடைப்பெற்று வந்த இப்படத்தின் பணிகள், ரிலீஸிற்கு சில வாரங்களுக்கு முன்புதான் முடிவுற்றது. உடனே படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்க தொடங்கின. ஒரு வழியாக படம், நேற்று (அக்டோபர் 19) வெளியானது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். காரணம், இப்படம் எல்.சி.யூவில் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்ததுதான்.
லியோ படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள்..
‘லியோ’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் பலர் முதல் நாளிலேயே பார்த்து விட்டனர். படத்தில் பல சர்ப்ரைஸ்கள் நிறைந்துள்ளதாகவும், முதல் பாதி திரைக்கதை வேகமாக நகர்வதாகவும் பல ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர். படத்தில் விஜய்க்கும் ஹைனாவிற்கும் வரும் சண்டை காட்சியும், க்ளைமேக்ஸ் ட்விஸ்டும் எதிர்பாராததாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
ரசிகர்கள் கூறிய குறைகள்..
லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பல காட்சிகளில் இசை இறைச்சலாக இருப்பதாகவும், சில வசனங்களை தெளிவாக கேட்க கூட முடியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். இதையடுத்து, “நான் ரெடி” பாடலில் விஜய்க்கு நல்ல நடன ஸ்டெப்ஸ்களை சொல்லி கொடுத்திருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். லியோ படத்தின் முதல் பாதிதான் நன்றாக இருந்ததாகவும் இரண்டாம் பாதி லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கம் போலவே தெரியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.
ஜெயிலரை மிஞ்சிய லியோ:
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ஜெயிலர். இதன் முதல் நாள் வசூலை லியோ திரைப்படம் மிஞ்சியுள்ளது. அப்படம், முதல் நாளில் 44 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், லியோ படம் முதல் நாளில் உலகளவில் 100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | லியோ படத்தை பார்த்து உதயநிதி சொன்ன ரிவியூ! அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!
ஒரே டெம்பேளட் கதை..
லியோ படம், தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் வந்த அதே ஆக்ஷன் த்ரில்லர் படங்களின் டெம்ப்ளேட் கதைதான் என்று லோகேஷ் கனகராஜ் முன்னரே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். படமும், அதே போன்ற கதையாகத்தான் வந்துள்ளது. இதனால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ்ஜிடம் அதிகமாக எதிர்பார்த்தாகவும், படம் தாங்கள் நினைத்தது போல இல்லை என்றும் சில விஜய் ரசிகர்களே கூறி வருகின்றனர்.
குடும்பங்களுக்கு பிடிக்கவில்லை..
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள், குடும்ப கதையை எதிர்பார்த்து வருபவர்களுக்கோ, குடும்பத்தை படத்திற்கு கூட்டிக்கொண்டு வருபவர்களுக்கோ பிடிக்காது என்பது அனைவருக்கும் தெரியும். இவர் படங்களில் காமெடி டைலாக்குகள் இருக்கும், அதுவும் மிகவும் சீரியஸான காட்சிகளின் போதுதான் இருக்கும். ரத்தம், சண்டை, கொலை வெறி தாக்குதல் என இவர் படம் முழுவதும் ரத்தக்களறிதான். அதனாலேயே பலர் இவரது படங்களுக்கு குடும்பத்தினருடன் செல்வதில்லை. லியோ படமும் குடும்ப கதையாக இருக்காது என லோகேஷ் கனகராஜ் முன்னதாக கூறியிருந்தார். சொன்னது போலவே குடும்ப கதையை எதிர்பார்த்து லியோ படத்திற்கு சென்றவர்களுக்கு அப்படத்தை பிடிக்கவில்லை. இதுவும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Leo Box Office Day 1: முதல் நாளே ஜெய்லர் வசூலை மிஞ்சிய லியோ! எத்தனை கோடி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ