Bigg Boss Tamil 5: கதை சொல்லிய ராஜு, கேட்டு அலறிய தாமரை!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 04:29 PM IST
Bigg Boss Tamil 5: கதை சொல்லிய ராஜு, கேட்டு அலறிய தாமரை!! title=

Bigg Boss 5 நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, நேற்று, அதாவது, அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கியது.  தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய நான்கு சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 

வழக்கம் போல் பிக் பாஸ் தமிழின் ஐந்தாவது சீசனையும் (Bigg Boss Tamil) நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். போட்டியாளர்களை அறிமுகம் செய்து, நிகழ்ச்சியை துவக்குவதற்கு முன் பிக்பாஸ் வீட்டை வழக்கம் போல் சுற்றி காட்டினார் நடிகர் கமல்ஹாசன். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் இருப்பதைக் காண முடிந்தது. 

இன்று காலை முதல் இன்றைய எபிசோடுக்கான 2 ப்ரோமோக்கள் வெளிவந்த நிலையில், மூன்றாவது ப்ரோமோவும் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் அமர்ந்து கதை சொல்லி பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. 

ALSO READ: குதூகலமாக இருக்கும் பிக்பாஸ் வீடு; புதிய ப்ரோமோ

குறிப்பாக, சின்னத்திரை நடிகர் ராஜு, நாடகக் கலைஞர் தாமரைச் செல்வி உட்பட சில போட்டியாளர்கள் அமர்ந்து உன்னிப்பாக கதை கேட்கிறார்கள். ராஜு கூறும் கதையை உன்னிப்பாக கேட்கும் தாமரைச் செல்வி ஒரு இடத்தில் பயந்து அலறுவதையும் ப்ரோமோவில் காண முடிகிறது. அப்படி ராஜு என்னதான் கதை சொன்னார்? இன்றைய எபிசோசில் காணலாம்!! 

18 போட்டியாளர்களின் விவரம்:

ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, பாடகி இசைவாணி, யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா, சின்னத்திரை நடிகர் ராஜூ ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துதகொண்டுள்ளனர். 

ALSO READ | Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News