புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை பயங்கரமாக தாக்கி வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை மிக விரைவில் தாக்க உள்ளதாகவும் கொரோனாவின் மூன்றாவது அலையை யாராலும் தடுக்க முடியாது என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய வைரஸைத் தவிர்ப்பதற்கு ஒரே ஒரு வழி தடுப்பூசி தான்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அரசாங்கம் ஏற்கனவே வழங்க ஆரம்பித்துள்ளது, மேலும் இந்த தடுப்பூசியானது (Vaccination) கொரோனா வைரஸ் போரை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் பலரின் மனதில் நிச்சயம் இருக்கும் ஒரு கேள்வி என்னவென்றால், நீங்கள் தடுப்பூசி பெற பதிவு செய்து பின்னர் கொரோனா நோயால் (Coronavirus) பாதிக்கப்பட்டு இருந்தால் எத்தனை நாட்களுக்குப் பிறகு கோவிட் தடுப்பூசி (After how many days should you get the vaccine) பெற வேண்டும் என்பது தான்.
வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கான சிறந்த வழி தடுப்பூசி பெறுவதுதான். டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரஸின் அறிகுறிகள், நோயின் தீவிரம் மற்றும் மீட்கும் நேரம் 80 சதவீதம் வரை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். தடுப்பூசிக்குப் பிறகு உங்களுக்கு கொரோனா வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது மிகவும் லேசான அறிகுறிகளாக இருக்கும். எனவே, தடுப்பூசி பெறுவது மிகவும் முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | யாரெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளக் கூடாது? நிபுணர்களின் அறிவுரை இதோ!!
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒரு நபருக்கு கோவிட் -19 தொற்று இருந்தால், அவரது உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது, இது 90 முதல் 180 நாட்கள் வரை நீடிக்கும். எனவே, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் தடுப்பூசி (Covid vaccine) எடுக்க வேண்டும், ஆனால் முழுமையாக குணமடைந்த 2 முதல் 4 வாரங்கள் கழித்தே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்குக் காரணம், வைரஸ் தொற்றுக்குப் பிறகு நீங்கள் குணமடையும்போது, உங்கள் உடலில் வைரஸுக்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசியிலிருந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு பயனளிக்காது. எனவே, இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையத் தொடங்கும் போது, கோவிட்டுக்கு தடுப்பூசி பெறுவது நல்லது. தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்கள் குணமடைந்த 2 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸையும் எடுக்க வேண்டும்.
(குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR