மும்பா தேவி கோவில் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இது தேவியின் அவதாரமான மும்பா என்ற கடவுளாக்க கட்டப்பட்டது.இந்தக் கோவில் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மும்பை நகரத்தின் காவல் தெய்வமாக ரிஷப வாகனத்தில் மும்பா தேவி காட்சி தருகிறாள். அம்பிகையின் முன்பு இரண்டு விளக்குத் தூண்கள் உள்ளன. ஒன்று செங்கலாலும், மற்றொன்று கல்லாலும் ஆனது. மும்பாதேவிக்கு மராத்திய பெண்கள் அணியும் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நவராத்திரி முக்கிய விழா.
மும்பாதேவி கோயிலில் அன்னபூரணிக்கு தனி சன்னதி இருக்கிறது. மீனவர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செவ்வாய்க் கிழமைகளில் அதிகக்கூட்டம் வரும். மும்பாதேவி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். மும்பை நகரின் மத்தியப்பகுதியில் உள்ள முக்கிய கோயில். இந்த தேவியின் உண்மையான பெயர் முங்கா தேவி என இருந்தது. காலப்போக்கில் மும்பா தேவி என மாறிவிட்டது.