மிரள வைக்கும் நயன்-அதரவாவின் இமைக்கா நொடிகள் டிரைலர்! Watch

இமைக்கா நொடிகள் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

Last Updated : Jun 27, 2018, 02:14 PM IST
மிரள வைக்கும் நயன்-அதரவாவின் இமைக்கா நொடிகள் டிரைலர்! Watch title=

இமைக்கா நொடிகள் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

அத்துடன் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 

ஏற்கனவே படத்தில் இருந்து `காதலிக்காதே', `விளம்பர இடைவெளி' என்று இரண்டு பாடல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை இப்படத்தின் அனைத்து பாடல்கள் வெளியிடப்பட்டதுடன் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

Trending News