ஒரே இடத்தில் நாம் உட்காரும் தருணத்தில் கை, கால்கள் உணர்ச்சியற்று மரத்து விடுகின்றன. நமக்கு சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
நமது உடலில் உள்ள ஏதேனும் ஒரு பகுதி நீண்ட நேரமாக அழுத்தத்தில் இருந்தால் அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, நரம்புகள் செயல்பாட்டை இழந்து விடுகின்றன. இதனால் தான் அந்த பகுதி உணர்ச்சியற்று மரத்து போகின்றது. இப்படி மரத்து போகும் சமயங்களில் கை, கால்களை லேசாக அசைத்தும் சிறிது நேரம் மடக்கி, நீட்டுவதால் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது.
கை, கால்கள் உணர்வின்மைக்கு என்ன காரணம்...
உடல் உறுப்புகள் மரத்து போவது நோய் இல்லாவிட்டாலும் சில நேரங்களில் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. முக்கிய உறுப்புகளான மூளை மற்றும் முதுகு தண்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் கூட அடிக்கடி மரத்து போகும்.
> அதே போல நம் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் நம் உடலில் இரு கால்களும் மரத்து போகும்.
> தொடர்ந்து ஆண்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்து கொள்பவர்களுக்கும், புற்றுநோய் மாத்திரைகள் எடுத்து கொள்பவர்களுக்கும் கூட அடிக்கடி கை, கால்கள் மரத்து போகும்.
> உடலில் ஏற்படும் வைட்டமின் B12 குறைபாடு காரணமாக கூட மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
> கர்ப்பப்பை வாய் ஸ்போண்டிலோசிஸ் கழுத்தின் கீல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதைவு கழுத்தில் உள்ள வட்டுகள் அல்லது மூட்டுகளை பாதிக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
> கை, கால்களை தவிர்த்து சிலருக்கு தலையில் ஒரு பக்கம் மட்டும் திடீர் என மரத்து போகும். அப்படி ஏற்பட்டால் சாதாரண நிகழ்வாக எடுத்துகொள்ள கூடாது. ஏனெனில், இது பக்கவாதம் ஏற்பட போவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, தலை மரத்து போனால், உடனடியாக நரம்பியல் மருத்துவரை பார்ப்பது நல்லது.
> முதுகெலும்புக் காயம் காரணமாக ஏற்படும் அதிர்ச்சி கை, கால்களில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மைக்கு வழிவகுக்கும்.