அயோத்தி ராமஜென்ம பூமியில் கலந்த ஆப்கான் காபூல் நதி நீர்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 07:03 PM IST
அயோத்தி ராமஜென்ம பூமியில் கலந்த ஆப்கான் காபூல் நதி நீர்..!!  title=

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி ஒருவர் அனுப்பிய காபூல் நதி நீரை ராம் லல்லா என்னும் குழந்தை ரமாருக்கு சமர்பிப்பதற்காக அயோத்தி வந்துள்ளதாக முதல்வர் யோகி தெரிவித்தார். காபூல் நதி நீரை கங்கை நீரை கலந்து அந்த நீரை ராம் லல்லாவுக்கு அர்பணித்தும் நீரை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் சேர்த்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதனுடன், நவம்பர் 3-ம் தேதி அங்கு நடைபெற உள்ள தீபத்ஸவத்துக்கான ஏற்பாடுகளையும் முதல்வர் பார்வையிடுவார்.

ராமர் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர், அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமிக்கு வழங்குவதற்காக  காபூல் நதி நீரை பிரதமர் மோடிக்கு (PM Narendra Modi) அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில், காபூல் நதி நீரை கங்கை நீரில் கலந்து அதனை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஊற்றியதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

ALSO READ | G-20 Summit: பிரதமர் மோடி வாடிகனில் போப்பாண்டவரை சந்தித்தார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News