அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 10:23 AM IST
  • இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா
  • மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
  • மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம்
  அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்? title=

கொரோனாவின் மூன்று அலைகள் ஓய்ந்திருக்கின்றன. இதனால் மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர். இருப்பினும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்தச் சூழலில் இந்தியாவில் சராசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 247ஐ விட அதிகமாகும்.

Corona

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு நேற்று கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில்,“கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி 1000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.  அண்மையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  

மேலும் படிக்க | இந்திய துணைக் கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை  பெற்ற வெற்றிகளை இழக்காமல், தடுப்பு நடவடிக்கைகயை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Corona

தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தடுப்பூசி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | Amway India மோசடி; ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News