Delhi News Today: ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இன்று மிக முக்கியமான நாள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதி பெஞ்ச் ஒத்திவைத்தது.
ஆம் ஆத்மி தலைவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 26 ஆம் தேதி மதுபானக் கொள்கை ஊழல் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் இருந்தபோது சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
சில வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 12 அன்று, அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
ஒருவேளை இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதியின் கே. கவிதா ஆகியோருக்குப் பிறகு மதுக் கொள்கை வழக்கில் சிறையிலிருந்து வெளிவரும் நான்காவது உயர்மட்டத் தலைவர் ஆவார்.
மேலும் படிக்க - பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ