ஸ்ரீநாத்ஜி கோவிலின் ஒற்றை அரிசியை வீட்டில் வைத்தால் நீங்கள் பில்லியனர்

Lord Krishna: அம்பானி, டாடா என உலக பணக்காரர்கள் பலரும் வணங்கும் ஸ்ரீநாத் கோவிலின் சிறப்பு.... கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஒன்றை வீட்டில் வைத்தாலும், உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 12, 2023, 01:57 PM IST
  • ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் ஆலயம்
  • ஸ்ரீநாத்ஜி கிருஷ்ணர் ஆலய மகிமை
  • அம்பானி, டாடா என உலக பணக்காரர்கள் வழிபடும் ஸ்ரீநாத் கோவிலின் சிறப்பு
ஸ்ரீநாத்ஜி கோவிலின் ஒற்றை அரிசியை வீட்டில் வைத்தால் நீங்கள் பில்லியனர் title=

ராஜஸ்தானில் உள்ள கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசிப் பிரசாதம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.  ராஜஸ்தானின் ஸ்ரீநாத்ஜி கோவிலை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் வசிக்கின்றனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்களான, அம்பானி, டாடா என பல குடும்பங்கள் உட்பட உலக பணக்காரர்கள் பலரும் ஸ்ரீநாத் கோவிலுக்கு அடிக்கடி செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஒன்றை வீட்டில் வைத்தாலும், உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வார் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை ஆகும்.   

அரிசியின் மகிமை
ஸ்ரீநாத் கோவிலில் ஆண்டுதோறும் அன்னகூட் திருவிழா நடைபெறுவது வழக்கம். அங்கு படைக்கப்படும் அரிசியை எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால், எப்போதும் குடும்பத்தில் செல்வம் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.


 
முகேஷ் அம்பானி குடும்பம்
கோடிக்கணக்கான மக்கள் ஸ்ரீநாத் கோயிலில் நம்பிக்கை கொண்டுள்ளனர் மற்றும் பக்தர்கள் ஆண்டு முழுவதும் இங்கு வந்து செல்கின்றனர். இதில் முகேஷ் அம்பானியும் இடம்பெற்றுள்ளார். அம்பானி குடும்பத்தினர் எந்த ஒரு சுப காரியத்திற்கும் முன் கண்டிப்பாக இங்கு வந்து தரிசனம் செய்வார்கள்.  முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் மகனின் திருமண நிச்சயதார்த்தம் இங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பழனி கோவில் முருகரின் நவபாஷாணம் மற்றும் கருவறை சிலைகள் ஆய்வு
 
வைஷ்ணவம்
ஸ்ரீநாத்ஜி வைஷ்ணவத்தை சேர்ந்த வல்லபாச்சாரியாரால் நிறுவப்பட்டது. இந்த ஊருக்கு கோபால்பூர் என்று பெயர்.ஸ்ரீநாத்ஜி கோவிலில் 7 வயது சிறுவனின் அவதாரத்தில் அமர்ந்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணரின் கருப்பு நிற பளிங்கு சிலை உள்ளது. இந்த மூல விக்கிரகம் 17ஆம் நூற்றாண்டில் கோவர்தன் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோவர்தன் பகுதியில் இருந்து விக்ரகத்தை வண்டியில் வைத்து எடுத்து வரும் வழியில் வாகனத்தின் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும், இறைவனே தேர் சக்கரம் சிக்கிய இடத்தில் உறைய விரும்புவதாகக் கருதி அப்பகுதியில் கோயில் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

1672ஆம் ஆண்டு கோசுவாமி என்கிற பூசாரிக்களால் ஸ்ரீநாத் ஜி கோயில் கட்டப்பட்டது. ஶ்ரீநாத் ஜி கோயிலுக்கு அருகில், கிருஷ்ணரின் தந்தை நந்த கோபனுக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அது நந்தாலயா என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று பண மழையில் நனையபோகும் ராசிகள்! 

நாதிர் ஷாவின் கண் பார்வை 
பிப்ரவரி 16, 1739 இல் டெல்லியை கைப்பற்றப்பட்ட பிறகு, நாதிர் ஷா நாத்வாராவுக்கு சென்று, அங்குள்ள ஸ்ரீநாத் ஆலயத்தின் கருவூலத்தை அடைய முயற்சித்தார். அப்போது, கோவிலின் படிகளில் ஏறியவுடன் கண்களின் பார்வை போய்விட்டது. தனது தவறுக்கு பிராயசித்தமாக, நாதிர்ஷா கோயிலின் படிகளை சுத்தம் செய்த பிறகு, கண்பார்வை மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.   

ஸ்ரீநாத் ஜி கோயிலில் இருக்கும் மூல விக்கிரகம் சுயம்புவாக உருவானதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வைணவ சமயத்தைக் கடைபிடிக்கும் பல லட்சம் பேருக்கு, ஶ்ரீநாத் ஜி கோயில் ஒரு முக்கிய புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது.

கருப்பு நிற ஒற்றை மார்பிள் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர், கோவர்தன மலையை தன் இடது கையால் தூக்கிப் பிடித்துள்ளது போன்ற சிலை இங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. நத்துவாரா ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

மேலும் படிக்க | உங்க கணவன்/மனைவி ‘இந்த’ ராசியா! அப்ப உங்களை மாதிரி லக்கி யாருமே இல்லை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News