Congress, Lok Sabha Election 2024: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார். தனது சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில், விரக்தியடைந்த, ஏமாற்றமடைந்த மற்றும் தோல்வியடைந்த பிரதமரின் வார்த்தைகளைக் கேளுங்கள் எனக் குறிப்பிட்டு, பிரதமர் மோடியின் ஆட்சி தோல்வியை நோக்கி செல்வதால் பிரதமர் மோடி பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி எக்ஸ் (X) பக்கத்தில் கூறியது..
"விரக்தியடைந்த, ஏமாற்றமடைந்த மற்றும் தோல்வியடைந்த பிரதமரின் வார்த்தைகளைக் கேளுங்கள்:
- காங்கிரஸ் உங்கள் வீட்டின் அறையைப் பறிக்கும்
- காங்கிரஸ் உங்கள் கழுத்தில் உள்ள தாலியைப் பறிக்கும்
- காங்கிரஸ் உங்கள் எருமையைப் பறிக்கும்
மேலும், 300-க்கு 150-க்கும் மேற்பட்ட இடங்களை தன்னிடம் இருந்து பறித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பதற்காகவே நரேந்திர மோடி இதுபோன்ற இப்படி முட்டாள்தனமான, தவறான, பொய்யான விஷயங்களைச் சொல்கிறார்.
இந்த அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து 'பொய்களின் இயந்திரமாக' மாறிவிட்டார் என்று ராகுல் காந்தி கூறினார்.
இந்திய அரசு பொதுமக்களிடம் இருந்து எதுவும் எடுக்காது.. மாறாக அவர்களுக்கு கொடுக்கும் - மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக செலவழித்த அதே அளவு பணத்தை மக்களுக்கு கொடுக்கும்.
நமது அரசு (இந்தியா கூட்டணி அரசு) அதானிகளின் ஆட்சியாக இருக்காது, இந்துஸ்தானியர்களின் ஆட்சியாக இருக்கும். இவ்வாறு தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
एक हताश, निराश और हारे हुए प्रधानमंत्री की बातें सुनिए:
- कांग्रेस आपके घर का कमरा छीन लेगी
- कांग्रेस आपके गले का मंगलसूत्र छीन लेगी
- कांग्रेस आपकी भैंस छीन लेगीनरेंद्र मोदी ऐसी बहकी बहकी और झूठी बातें इसलिए कर रहे हैं क्योंकि कांग्रेस उनकी 300 में से 150 से ज्यादा सीटें…
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2024
மேலும் படிக்க - ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்தி
பாலியல் குற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் -காங்கிரஸ்
மறுபுறம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
பாலியல் குற்றத்தில் சிக்கியவரை பாராட்டிய மோடி -சுப்ரியா ஸ்ரீநெட்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட் கூறுகையில், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி, "அவர் அவரை (பிரஜ்வாலை) பாராட்டியது மட்டுமல்லாமல், ஏப்ரல் 14 அன்று அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவும் வேண்டுகோள் விடுத்தார்" என்று கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ