தலைநகர் டெல்லியில் 8 கொரோனா வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ள நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான குதுப் மினார் மார்ச் 31-ஆம் தேதி வரை அடைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தாஜ்மஹால், செங்கோட்டை, குதுப் மினார் உள்ளிட்ட நாட்டின் அனைத்து வரலாற்று பாரம்பரியங்களும் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. இந்த தகவலை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் வழங்கினார்.
"கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் அனைத்து பாரம்பரிய, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் மத்திய அருங்காட்சியகங்கள் மார்ச் 31 வரை மூடப்படும்" என்று பிரஹ்லாத் படேல் தெரிவித்துள்ளார். முன்னதாக, கொரோனா வைரஸ் குறித்து அரசாங்கம் பல்வேறு ஆலோசனைகளை வெளியிட்ட நிலையில் தற்போது இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Delhi: Qutub Minar has been closed till 31st March due to #Coronavirus. There are total 8 positive cases in the national capital. pic.twitter.com/gnk5wtDD3Y
— ANI (@ANI) March 17, 2020
ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸின் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் இன்று காலை துவங்கி 11 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 125-ஆக அதிகரித்துள்ளது.
இதில் குறிப்பிடதக்க்க விஷயம் என்னவென்றால், மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் இந்த வைரஸால் இதுவரை 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.