புதுச்சேரியில் தனது எண்ணத்தில் தோன்றிய காட்சிகளை உழவர் தினமான இன்று வீட்டு வாசலில் 7 அடியில் ரங்கோலி ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார் டெரகோட்டா கலைஞர் வெங்கடேஷ பெருமாள். நாற்று நடுவது போலவும், கதிர்களை பெண் ஒருவர் தூக்கிச்செல்வது, ஜல்லிக்கட்டு காலையை அடக்குவது போன்ற ஓவியங்கள் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ பெருமாள், மிகவும் ஏழ்மையான கும்பத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே ஓவியம் மீது கொண்ட அலாதி பிரியம் மற்றும் ஆர்வம் காரணமாக ஓவியத்திற்கு என்று தனியாக பயிற்சிக்கு செல்லாமல் தனக்கு தெரிந்தவற்றை வரைந்து வந்தார். நாளடைவில் தனது தனித்திறமையால் ஆண்டுதோறும் முக்கிய பண்டிகை நாட்களில் தனது வீட்டின் முன்பு கோலமாவுகளை கொண்டு ரங்கோலியாக ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டு வாசலில் 7 அடி அகலம் 5 அடி உயரத்தில் விவசாயத்தையும், தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் தனது எண்ணத்தில் தோன்றியதை ஓவியமாக வைரந்து அசத்தியுள்ளார். அதில் விவசாயிகள் நாற்று வடுவது போலவும், பெண் ஒருவர் கதிர் அரிவாளை கையில் வைத்துக்கொண்டு நெற்கதிர்களை அறுத்து செல்வது போலவும், ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் இளைஞர் ஒருவர் மாடு பிடிப்பது போலவும் தத்ருபமாக ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
இதில் அசத்தும் வகையில் 5 அடியில் அழகிய பெண் கதிர் அறிவாளை வைத்துக்கொண்டு நெற்கதிர்களைள தலையில் சுமந்துஇருக்கும் ஓவியம் பிரம்மியமாக கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதற்காக சுமார் 4 மணி நேரத்தில் 4 கிலோ வண்ண கோல மாவுகளை கொண்டு இந்த ஓவியம் ரங்கோலியை வரைந்து அசத்தியுள்ளார். சாதாராண கோலமாவை மட்டுமே கொண்டு 3டி வடிவில் இந்த ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் வெங்கடேஷபெருமாள்.
இவரது ரங்கோலியை அவ்வழியாக செல்லும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வது மட்டுமல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டு வெங்கடேஷ பெருமாளை பாராட்டிச் செல்கின்றனர். இவர் ஓவியத்தில் மட்டுமல்லாமல் டெரக்கோட்டா செய்வதிலும் கைதேர்ந்தவர். மேலும் நடனம் கற்றுக்கொடுப்பதிலும் சிறந்தவர் ஆவார். இந்த ஓவிங்களின் அடியில் உயிரைக்காக்கும் உழவைக்காப்போம் என்று வாசகமும் எழுதியுள்ளார்.
இவருக்கு ஒத்துழைக்கும் வகையில் அவரது வீட்டில் வசிக்கும் சிறுமிகள் கோலங்களுக்கு வண்ணங்கள் இட்டு உதவி செய்தனர்.
இதுபோன்ற ஏழ்மை நிலையில் இருந்தாலும் தனது ஓவியத்தால் அனைவரது மனதையும் கவர்ந்து அசத்தி வருகிறார் வேங்கடேசபெருமாள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR