புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், பொது இடத்தில் உலவினால், நடவடிக்கை எடுக்கப்படும் எனத் அரசு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் (Omicron) பரவல் குறித்த அச்சல் நிலவி வரும் இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என புதுச்சேரி சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார்.
நோய் தொற்றை தடுக்க, தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்தி, மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகலை செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
ALSO READ | Breaking! Omicron Alert: டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான் வைரஸ்
இதன் பயனாக புதுச்சேரியில் அதிக அளவில் மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் என்றாலும், இன்னும் சில தயக்க உணர்வு மற்றும் பிற காரணத்தினால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வராமல் இருக்கின்றனர்.எனவே, கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் பொது இடங்களில் நடமாடினால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
The government of Puducherry makes COVID19 vaccination compulsory in the Union Territory with immediate effect. pic.twitter.com/i87ZhAZFbN
— ANI (@ANI) December 5, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR