ஜார்கண்டில், அரசியல் பரபரப்பு நிலவுகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் ஏழு மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், பின்னர் அவரை கைது செய்தனர். ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறையினர் பலமுறை சம்மர் அளித்திருந்த நிலையில், அவர் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த வாரம் அவரது வீட்டிலேயே விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் அவரிடம் 28 -29 ஆம் தேதிகளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், அவர் டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்று, பின்னர் ரகசியமாக தலைநகரம் ஆட்சிக்கு திருப்பினார். இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். இதை எடுத்து ஜார்க்கண்ட் முத்தி மோட்சா கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜினாமா செய்த முதல்வர் ஹேமந்த் சோரன்
முன்னதாக முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் வழங்கினார். கூடவே சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பவ சோரன் பதவி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாயின. சம்பை சூரன் சிராக்கிலா தொகுதியிலிருந்து எம்எல்ஏ யார் தேர்வு செய்யப்பட்டவர் அவர் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பை சோரன் ஆளுநரை இரண்டு முறை சந்தித்தார். தனக்கு 43 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் சாம்பை சோரன் தெரிவித்தார். ஆனால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய இன்னும் நேரம் கொடுக்கப்படவில்லை.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எடுத்துள்ள முடிவு
இந்நிலையில், MLA-க்களை பாதுகாக்க அவர்களை ரெசார்டில் பாதுகாகாப்பாக வைக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவெடுத்துள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி வைத்துள்ள எம்எல்ஏக்கள், குதிரை பேரத்திற்கு பலியாகாமல் அங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என அக்கட்சி அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Budget 2024: இந்த மானியங்கள் கண்டிப்பாக உயரும்... அடித்துக்கூறும் நிபுணர்கள்
தெலுங்கானாவிற்கு செல்ல தயாராகும் ஜார்கண்ட் எம் எல் ஏக்கள்
ஜார்க்கண்டில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, இரண்டு வாடகை விமானங்கள் ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. ஒரு வாடகை விமானம் 10 இருக்கைகள் கொண்டதாகவும், மற்றொன்று 33 இருக்கைகள் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை ஐதராபாத் அழைத்துச் செல்லலாம். மறுபுறம், எம்.எல்.ஏ.க்கள் ராஞ்சியில் இருந்து பேருந்துகள் மூலம் விமான நிலையத்தை அடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த ஒரு மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. ஜார்கண்ட் சுரங்கங்களின் மாநிலம் என அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதி... நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ