கொரோனா தொற்று பூஸ்டர் டோஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதை சுகாதார அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்களை பெற்றுள்ளது. தடுப்பூசி பல்வேறு வழிகளில் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக மக்கள் பயப்படுகிறார்கள். அதில் மாரடைப்பு குறித்த அச்சம் அதிகமாக காணப்படுகிறது.
மக்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு, தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு ஆய்வை நடத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ICMR) மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ICMR-இன் புதிய ஆராய்ச்சி என்ன?
கடந்த 2 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் விவரங்களை ICMR சேகரிக்கும். இவர்களில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆராய்ச்சி உறுதிசெய்யும்; இவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதா, இல்லையா; எந்த தடுப்பூசி மற்றும் எத்தனை டோஸ் கொடுக்கப்பட்டது. இவையனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.
மாறாக, மாரடைப்பு நோயாளிகள் நிச்சயம் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். ஏனென்றால், கொரோனா தொற்றால் மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
Fortis Escorts மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான அசோக் சேத்தின் கூறுகையில்,"கொரோனா தொற்று சுவாசம் தொடர்பான நோய் மட்டுமல்ல, இது பலருக்கும் மாரடைப்பை உருவாக்கும். கோவிட் தொற்றால், உடலின் தமனிகளில் (Arteries) வீக்கம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், இதயத்தின் தசைகளும் வீக்கமடைகின்றன.
இதனுடன், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பின்னர், அவர்களுக்கு ரத்த உறைவு நிகழ்வுகளும் (Blood Clot) காணப்படுகின்றன. கொரோனா நோயாளிகள் குணமடைந்த பிறகு ஒரு மாதம் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய நோயாளிகள் குணமடைந்த உடனேயே உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாக மாற்றமடைய வேண்டும்.
பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, குளிர்காலத்தில் கொரோனா ஒரு நபரைத் தாக்கினால் மாரடைப்புக்கான வாய்ப்பு 31 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது. ஏனென்றால், குளிர்ந்த காலநிலையில் நரம்புகள் சுருங்கிவிடும். இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தூக்கத்தின் போதும் உடல் செயல்பாடு குறைகிறது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவும் குறைகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்த அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தும்.
Fortis Escorts மாரடைப்பு மருத்துவர் அபர்ணா ஜஸ்வால் கருத்துப்படி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு வருபவர்களின் படங்கள் அல்லது நடைபயிற்சி போது திடீரென விழுவது போன்ற படங்கள் கோவிட் தடுப்பூசியின் பக்க விளைவுகளா அல்லது வேறு ஏதாவது என்று பலரையும் குழப்பமடையச் செய்தன. குறிப்பாக 30 முதல் 50 வயதுக்குட்பட்ட உடற்தகுதி உடையவர்களிடையே மாரடைப்பு எண்ணிக்கைகள் அதிகரித்த பிறகு மக்கள் பயப்படுகிறார்கள்.
மார்பில் வலி ஏற்பட்டால் இந்த பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்
இதுபோன்ற சூழ்நிலையில், எளிய இ.சி.ஜி., ரத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ மூலம் மட்டுமே இதய நோய் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, சிறிய அறிகுறிகளை கூட மக்கள் புறக்கணிக்கக்கூடாது. ஆனால், அரசாங்கத்தின் தரவுகளின்படி, தடுப்பூசியின் பக்க விளைவுகளால் இந்தியாவில் 9 பேர் மட்டுமே இறந்துள்ளனர். மேலும் தடுப்பூசி யாருக்கும் ஆபத்தானது அல்ல, அதே நேரத்தில் இது அதிக நன்மை பயக்கும் என்று அது கூறுகிறது.
மேலும் படிக்க | பரவும் கொரோனா! புத்தாண்டு முதல் புதிய கட்டுப்பாடு RT-PCR கட்டாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ