சண்டிகர்: தமிழ்நாட்டில் வசிப்பதை விட பாக்கிஸ்தானில் வசிப்பது எனக்கு எளிமையான விஷயம் என பிரபல கிரிக்கெட் வீரர் நவோஜத் சித்து தெரிவித்துள்ளார்!
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய அமைச்சருமான நவோஜத் சிங் சித்து அவர்கள் கடந்த வெள்ளி அன்று கசௌளியில் நடைப்பெற்ற இலக்கியம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சில் பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாபிற்கும், இந்தியாவில் உள்ள பஞ்சாபிற்கும் இடையே நிலவும் கலாச்சார ஒற்றுமை குறித்து அவர் பேசினார்.
அப்போது... தனக்கு பாக்கிஸ்தானில் இருக்கும் பஞ்சாபிற்கும், இந்தியாவில் இருக்கும் பஞ்சாபிற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அங்கு வாழும் மக்களும் பாஞ்சாபி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர், எனவே எனக்கு எந்த வித வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு நான் சென்றால் அங்கு வாழும் மக்கள் என்ன பேசுகின்றனர் என எனக்கு புரிவதில்லை. ஓரிரு வார்த்தைகளை தவிர அவர்கள் என்ன பேசுகின்றனர் என தெரிவதில்லை. அங்கு கிடைக்கும் உணவுகள் உண்பதற்கு கடினம் தான்.... இதற்கு உணவு ருசியாக இல்லை என்பது பொருள் அல்லி, தமிழகத்தில் கிடைக்கும் உணவிலை நெடு நாட்களுக்கு உண்பது என்பது என்னால் முடியாத காரியம் என தெரிவித்துள்ளார்.
நவோஜ்த சித்துவின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஷிரிமௌனி அகலி தல் கட்சியின் செய்தி தொடர்பாளர் தல்ஜிட் சிங் சீமா தெரிவிக்கையில்... "மத்திய அமைச்சர் பொருப்பில் இருக்கும் ஒரு நபர் தனது ஒவ்வொரு வார்த்தையினையும் கவனித்து தான் பேசவேண்டும். மற்றவர்களை புகழ்ந்து பேசுவதில் தவறில்லை, ஆனால் மற்றவரை புகழ்வதற்காக, நம் நாட்டவரை இகழ்வது ஏற்புடையது அல்ல" என குறிப்பிட்டுள்ளார்!