மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 117 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு!!

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 14 மாநிலங்கள் 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது!!

Last Updated : Apr 21, 2019, 08:44 AM IST
மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 117 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு!! title=

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 14 மாநிலங்கள் 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது!!

இந்தியா முழுவதுமான மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரட்சரங்கள் நாடுமுழுவதும் சூடுபிடித்து வருகின்றநிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 117 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. 

3 ஆம் கட்ட தேர்தல் வருகிற 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. குஜராத்தில் 26 தொகுதிகள், கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், சட்டீஸ்கரில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி என மொத்தம் 117 தொகுதிகளில் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 ஆம் கட்ட தேர்தலில் 1,600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 3 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3 ஆம் கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களம் இறங்கி இருக்கிறார். இந்த தொகுதி தமிழக எல்லையை யொட்டி அமைந்து உள்ளது.

 

Trending News